உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமாக லக்னோவில் உள்ள சிட்டி மாண்டெஸ்சோரி எனும் பள்ளி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
நிலப்பரப்பில் இல்லாது, கல்வி பயிலும் மாணவர் அடர்த்தியின் அடிப்படையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் கடந்த 2010-11 ஆண்டு கல்வியாண்டு நிலவரப்படி 39,437 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
இக்கல்வி ஆண்டில்,
READ MORE
இது 45,000 ற்கு அதிகமான மாணவர் சேர்க்கையை எட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே 2013க்கான உலக கின்னஸ் சாதனை புத்தகத்தின் 57 வது பதிப்பில் இச்சாதனை பதியப்படவுள்ளது.இக்கல்வி ஆண்டில்,
READ MORE
இது குறித்து அப்பள்ளி நிர்வாகி ஜெகதீஷ் காந்தி கூறுகையில், உலக அளவில் இப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம் பெருமை அளிப்பதாக உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாட உள்ளோம் என்றார்.
1959ம் ஆண்டு ரூ.300 முதலீட்டில் வாடகை கட்டிடமொன்றில் 5 மாணவர்களுடன் குறித்த சி.எம்.எஸ் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கிய இப்பள்ளியின் சிறப்பான கல்வி நிர்வாகம், கற்றுகொடுத்த தரம் என்பவற்றை பாராட்டி 2002ம் ஆண்டு யுனெஸ்கோவின் அமைதிக்கல்விக்கான கௌரவ சிறப்பு விருதையும் இப்பள்ளி பெற்றுள்ளது. இவ்விருதை பெற்ற ஒரே ஒரு உலக பள்ளி இது மட்டுமே. இப்பள்ளிக்கு லக்னோவில் மட்டும் 20 கிளைகள் உள்ளன.
No comments:
Post a Comment