ஈமெயில் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவிசெய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது.
நாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் இட்டால் எவ்வாறு இருக்கும்.இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.
தளத்திற்கான சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு செல்லவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள திரையமைப்பு போல் ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும். பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து, மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த செக்பாக்சில் டிக் செய்து SUBMIT பொத்தானை அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.
பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்யும் போது மேலே குறிப்பிட்டுள்ள படம் போல் தோன்றும். அந்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர்கள் அந்த மின்னஞ்சலை பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் மின்னஞ்சலையும் கடவுச்சொல் கொண்டு மூட முடியும்.
No comments:
Post a Comment