இதற்காக இந்த காரில்
ரேடார், கேமராக்கள், அகச்சிவப்பு கேமரா, லேசர், சென்சார் மற்றும் ஜி.பி.எஸ் GPSபோன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை இதனுள் இருக்கும் கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும்.
இதன் ரேடார் கருவி காரை சுற்றி கண்ணுக்கு தெரியாத இடங்களில் இருப்பவற்றை கணினிக்கு தெரிவிக்க உதவுகிறது. இதில் உள்ள கேமராக்கள் சாலையின் எல்லைகளை அறிவிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அகச்சிவப்பு கேமாரா இருளிலும் சாலையில் வருபவற்றை துல்லியமாக கணினிக்கு அறிவிக்கும். இதன் மேற்புற கூரையில் உள்ள லேசர்கள் காரை சுற்றி 2 செ,மீ க்குள் வருபவற்றை அறிவிக்கும். இதில் உள்ள GPS தொழில்நுட்பம் காரின் தற்போது இருக்கும் இடத்தை கணினிக்கு அறிவிப்பதோடு கூகுள் மேப் உதவியுடன் கார் செல்ல வேண்டிய திசையையும் சரியாக கணினிக்கு அறிவிக்க உதவுகிறது. இதன் மூலம் கார் சரியான இடத்தை சென்றடைவதுடன் வழியில் வருபவற்றை அறிந்து சரியாக நின்று செல்லும் திறனை பெறுகிறது. இதனால் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப் படுவதோடு போக்குவரத்து நெரிசல்களும் குறையக் கூடும்.
இதற்கான சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் முதலீடு செய்திருப்பவர்கள் General Motors, Volkswagen, Volvo, BMW, Audi, Mercedes போன்ற உயர் ரக கார் தயாரிப்பு நிறுவனங்கள். எனவே இது பயன்படுத்தப்படப் போவது அதிக விலை கொண்ட கார்களில் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment