நம்முடைய கம்ப்யூட்டரை லாக் செய்திட பல வகையான மென்பொருட்கள் இருந்தாலும், இப்படி ஓன்று இருப்பது அநேகமாக யாருக்கும் தெரியாது.
யு எஸ் பி கணினியில் செருகியிருந்தால் மட்டுமே நம்முடைய கணினி வேலை செய்யும். அதை எடுத்து விட்டால் தானாகவே லாக் ஆகி விடும். அதுவும் எவ்வித ப்ரோக்ராம்களும் இழக்கமலேயே,
இது மிகவும் எளிதானதும், அனைத்து விண்டோஸ் களிலும் வேலை செய்யகூடியதுமாகும்.
முதலில் இந்த சைட்டில் சென்று இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யவும். பின்னர் உங்கள் யு எஸ் பி யை கணினியில் செருகவும். இன்ஸ்டால் முடிந்த பின்னர் கீழே உள்ளது போல் ஒரு பெட்டி திறந்து கொள்ளும். அதை ஓகே கொடுக்கவும்.
இப்போது கீழே காணப்படுவது போல் மீண்டும் ஒரு பெட்டி திறக்கும்.அதில் உங்களுடைய புதிய பாஸ்வோர்ட் கொடுத்து க்ரியேட் கீ கொடுத்து ஓகே செய்யவும்.
இப்போது அந்த பெட்டி தானாகவே மூடிக்கொள்ளும். மீஎண்டும் சாப்த்வாரே ஐக்கனில் கிளிக் செய்தால், உங்கள் டாஸ்க் பாரில் கீழே காணப்படுவது போல் ஒரு சிறிய ஐக்கன் பச்சை நிறத்தில் உள்ளதை பார்க்கலாம்.
அதுக்கப்புறம்தான் எல்லாம் உங்களுக்கே தெரியுமே.
No comments:
Post a Comment