சாம்சங் தங்கள் சாதனங்களை காப்பி அடிப்பதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்ததையும், அந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையும் பார்த்தோம் அல்லவா? தற்போது ஐபோன் 5 மொபைலுக்காக ஆப்பிள் நிறுவனம் மீது சாம்சங் வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும் ஆப்பிள் ஐபேடை காப்பியடித்ததாக சொல்லப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் Samsung Galaxy Tab 10.1 சாதனத்தை அமெரிக்காவில் விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை தற்போது விலக்கப்பட்டுள்ளது.
25 பில்லியன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் பதிவிறக்கங்கள்:
ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் மற்றும் விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ தளமான கூகுள் ப்ளே தளத்தில் இதுவரை 6,75,000 அப்ளிகேசன் மற்றும் விளையாட்டுக்கள் உள்ளன. கடந்த மாதம் 25 பில்லியன் பதிவிறக்கங்களைத் தொட்டிருக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் ஐந்து நாட்களுக்கு 25 அமெரிக்க சென்ட்களுக்கு சிலவற்றை சலுகை விலையில் தந்தது.
பேஸ்புக் அன்பளிப்பு - வெற்றி பெறுமா?
பேஸ்புக் நிறுவனம் பங்கு சந்தையில் நுழைந்தப் பின் முதலில் Karma என்னும் மொபைல் அப்ளிகேசன் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இது நண்பர்களுக்கு அன்பளிப்புகளை (பணம் கட்டி) அனுப்புவதற்கான சேவையாகும். தற்போது பேஸ்புக்கில் இந்த வசதியை Facebook Gifts என்ற பெயரில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நண்பர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பலாம். தற்போது அமெரிக்க பயனாளர்களில் சிலருக்கு மட்டும் இந்த வசதி வந்துள்ளது.
பங்குசதையில் பேஸ்புக் தனது ஆரம்ப விலையை விட இன்னும் குறைவாகவே உள்ளது. இந்த வசதி வெற்றிபெற்றால், பங்கு மதிப்பு உயரக் கூடும்.
மேலும் விவரங்களுக்கு, https://www.facebook.com/about/gifts
மன்னிப்பு கேட்ட ஆப்பிள்:
"Most Powerful Mapping Service Ever" என்று சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் மேப்பில் பல்வேறு பிழைகள் உள்ளன. சரியான வழிகளைக் காட்டுவதில்லை மேலும் பல படங்கள் சொதப்பலாக உள்ளது. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டது.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவன CEO டிம் குக் எழுதியுள்ள கடிதம்
http://www.apple.com/letter-from-tim-cook-on-maps/
கூகுள் மொபைல் மேப்பில் தெருப்பார்வை:
கூகுள் மேப்பில் உள்ள தெருப்பார்வை (Street View) வசதியைப் பற்றி தெரிந்திருக்கும். விரைவில் அந்த வசதியை மொபைல்களில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இருக்கிறது கூகுள் நிறுவனம்.
No comments:
Post a Comment