READ MORE
சில சமயம் மற்ற வசதிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக சில வசதிகளை நீக்கும்.
Adsense for feeds:
நம் தளத்தின் செய்தியோடைகளில் ஆட்சென்ஸ் விளம்பரம் வைக்கும் வசதி இருந்தது. வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் புதிதாக யாரும் அதனை பயன்படுத்தமுடியாது. ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், வரும் டிசம்பர் 3-ஆம் தேதியிலிருந்து அதில் விளம்பரங்கள் தெரியாது.
Classic Plus:
Classic Plus என்பது கூகுளின் முகப்பு பக்கத்தில் நமக்கு விருப்பமான படங்களை வைக்கும் வசதியாகும். வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் படங்களை நாம் அப்லோட் செய்ய முடியாது. நவம்பர் மாதம் முதல் இந்த வசதி முற்றிலும் நீக்கப்படும்.
Google Storage:
கூகுளின் Cloud Storage வசதியான கூகிள் ட்ரைவ் தளத்தில் நமது கோப்புகளை சேமித்து வைப்பதற்கு இலவசமாக 5 GB கொள்ளளவு கொடுத்திருந்தது. அதே போல நமது போட்டோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியான பிகாஸா தளத்தில் இலவசமாக 1 GB கொள்ளளவு கொடுத்திருந்தது. இன்னும் சில மாதங்களில் இரண்டையும் ஒன்றிணைக்கப் போகிறது கூகுள். இதன் மூலம் Google Drive, Picasa இரண்டையும் சேர்த்து 5 GBகொள்ளளவு மட்டுமே கிடைக்கும்.
நம் ப்ளாக்கில் ஏற்றும் படங்கள் பிகாஸாவில் சேரும் என்பது நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் சில:
- நம் அருகில் உள்ள இடங்களை தேடுவதற்கு உதவும் Places Directoryஎன்னும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை நீக்கிவிட்டது. மொபைல்களுக்கான கூகுள் மேப்பிலேயே தேடலாம் என்று கூறியுள்ளது.
- Insights for Search என்னும் வசதியை Google Trends வசதியுடன் சேர்த்துள்ளது. http://google.com/trends என்ற முகவரியில் அதிகம் தேடப்படுபவைகள் அல்லது குறிப்பிட்ட வார்த்தைகளின் தேடுதல் மதிப்பு ஆகியவற்றைப் பார்க்கலாம்.
- கூகுள் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் இதுவரை நமது தளத்தை (கூகுள்) ப்ளஸ் ஒன் செய்யப்பட்டவைகளின் தகவலைக் கட்டியது. வரும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் அதனை நீக்கவுள்ளது. இந்த தகவலை கூகுள் அனாலிடிக்ஸ் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment