இதுவரை தாங்கள் கூகுள் தேடல் இயந்திரம் (Google Search Engine) மூலம் தேடிய அனைத்து தகவல்களையும் காண ஆவலாக உள்ளீர்களா, நண்பர்களே!
ஓர் தகவலை தேட, கூகுள் தேடல் (Google Search Engine) இயந்திரத்தை பயன்படுத்துவரும், கூகுள் அக்கொண்டையையும் (Google Account) கொண்டவரா தாங்கள்? ஆம் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்,
READ MORE
READ MORE
கடந்த காலங்களில் ஏதேனும் ஓர் மிக முக்கிய தகவல் ஒன்றை மிகவும் சிரமம் பட்டு கூகுள் தேடல்(Google Search Engine) இயந்திரம் மூலம் தேடி, அதற்கான விடையும் பெற்று பயன்பெற்று இருப்பிர்கள். ஆனால் அதே தகவல் தங்களுக்கு மீண்டும் தற்போது வேண்டும். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள், என்ன மீண்டும் அதிக நேரத்தை செலவழித்து அதை கடினபட்டு கண்டுபிடிக்க எண்ணினால், அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள். தற்போது காலகட்டத்தில் நேரம் மிக முக்கிய ஒன்று. மிக எளிதாக இந்த வேலையை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் தங்களுக்கு உதவி புரிகிறது.
இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்க Google History. பின்னர் தோன்றும் விண்டோவில் தங்களது கூகுள் அக்கொண்ட் மூலம் நுழைந்து கொள்ளுங்கள். யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்(Username, Password) தந்து. பின்னர் தங்களுக்கான தேடல் தகவல் அனைத்தும் அங்கு தரப்பட்டு இருக்கும். மேலும் கடந்த மாதம் அல்லது ஆண்டு தேடல் தகவலை பெற எண்ணினால், வலதுகை ஓரத்தில்(Left Side) ஓர் சிறிய நாள்காட்டி(calendar) இருப்பதை தாங்கள் காணலாம்.அதில் தங்களுக்கு எந்த நாளில் தாங்கள் மேற்கொண்ட தேடல் தகவல் வேண்டுமோ அதை தேர்வு செய்து காணலாம்.
No comments:
Post a Comment