ஆண்கள் நட்பை கால்பந்து மாதிரி உதைக்கிறார்கள்
ஆனாலும் அதிலே சின்ன கீறல் கூட விழுவதில்லை
பெண்கள் நட்பை ஒரு கண்ணாடி ஜாடி போன்று கையாளுகிறார்கள்
ஆனால் அது விரைவிலேயே சுக்கு நூறாகிவிடுகிறது
ஒவ்வொரு தழும்புக்கு பின்னாலும் ஒரு காயம் இருக்கிறது
ஒவ்வொரு காயத்திற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது
அது சொல்கிறது
ஆண்கள் பெண்களின் முதல் காதலனாக ஆசைபடுகிறார்கள்
பெண்கள் ஆண்களின் கடைசி காதலியாக ஆசைபடுகிறார்கள்
இருட்டை கண்டு பயம் கொள்ள வேண்டாம்
அது சொல்கிறது
அருகில் எங்கோ ஓரிடத்தில் வெளிச்சம் உள்ளது என்று
மிகவும் சிறந்ததாக இருப்பது மிக பெரியது
ஆனால் மிகவும் தனித்தன்மையுடன் இருப்பது
மிக மிக சிறந்தது
உங்களுக்கு ஒன்று தேவை
ஆனால் நீங்கள் முயற்சிக்க தயாரில்லை என்பது
உங்களுக்கு நீச்சல் கற்றுக்கொள்ள ஆசை
ஆனால் நீங்கள் நீரில் நனைய தயாரில்லை என்பதை போன்றது
சொந்தங்கள் என்பது கண்ணாடி போன்றது
உடையாமல் பாதுகாக்க வேண்டும்
ஒருவேளை உடைந்து விட்டால் அதை விட்டு விட வேண்டும்
இல்லையேல் கைகளை காயப்படுத்தி விடும்
ஒரு குழந்தையின் சிரிப்பையும்
ஒரு முதியவரின் ஆனந்த கண்ணீரையும் விட
விலைமதிக்க முடியாதது ஒன்று மில்லை
எல்லா பொருள்களும் அழகாகத்தான் இருக்கின்றன
ஆனால் எல்லோருடைய கண்களுக்கும் அது தெரிவதில்லை
உங்கள் கண்ணீருக்கு ஒருவராலும்
விலைகொடுக்க முடியாது
அப்படி விலைகொடுக்க முடிந்தவர்
உங்களுக்கு ஒருபோதும் கண்ணீர் உண்டாக்க மாட்டார்
காதலித்த ஒருவரை காதலிப்பதை யாராலும் நிறுத்த முடியாது
அவர் இல்லாமல் வாழ்வதை மட்டும் நாம் கற்றுகொள்கிறோம்
சில நேரங்களில் யார் நமக்காக கஷ்டபடுகிறார்கள்
என்பதை தெரிந்து கொள்ள நாமாகவே துன்பங்களை
வரவழைத்து கொள்ள வேண்டியிருக்கிறது
இரண்டு பேர் விளையாடி
இரண்டு பேருமே வெற்றி பெரும் விளையாட்டு
காதல் மட்டுமே
எதோ ஒரு விசயத்துக்காக நான் உயிரை கூட தருவேன்
என்னுமளவுக்கு ஒரு விசயத்தை நேசிக்காதவன்
உயிர் வாழ தகுதியற்றவன்
நல்ல செயல்களின் முடிவில் எல்லாமே
சரியாக இருக்கும்
அப்படி எல்லாமே சரியாக இல்லை என்றால்
அது முடிவு அல்ல
இதற்காக சாக கூட செய்யலாம் என்ற
மதிப்புள்ள ஒன்றை கண்டுபுடி
பின்பு அதற்காக மட்டுமே வாழ்ந்து பார்
உன்னை பார்த்து அதிகம் சிரிக்கும்
உனது உற்ற நண்பர்கள் மட்டுமே
உன்னை அதிகம் பாராட்டுவார்கள்
இருட்டில் மட்டுமே உங்களால்
நட்சத்திரங்களை காண முடியும்
No comments:
Post a Comment