/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, October 10, 2012

App 2 SD அசத்தலான Android Application!!!





இன்றைக்கு ஆன்ட்ராய்ட் மொபைல்கள் மிகவும் குறைந்த விலைக்கே கிடைக்கும் நிலையில் அனைவரும் அதை வாங்க விரும்புகின்றனர். விலை குறைவாக உள்ள மொபைல்கள் போன் மெமரி குறைவாக கொண்டிருக்கும். இதில் நீங்கள் Google Play - இல் இருந்து அப்ளிகேஷன் எதுவும் டவுன்லோட் செய்தால் மெமரி கார்டுக்கு அவற்றை move செய்ய வேண்டி வரும்,. ஆனால் எல்லா அப்ளிகேஷன்களையும் நீங்கள் அப்படி Move செய்ய இயலாது. இந்த App 2 SD Application ஆனது உங்களுக்கு இந்த வசதியை எளிதாக செய்ய உதவுகிறது.
இதில் உள்ள வசதிகளை காண்போம்:

முதலில் "Movable" என்ற பக்கத்தில் உங்கள் போன் மெமரி உள்ள Application களில் எதையெல்லாம் Move செய்ய முடியும் என்று காண்பிக்கும். 


இப்போது Options பட்டன் அல்லது குறிப்பிட்ட App மீது கிளிக் செய்தால் அதை Move செய்யும் Option வந்து விடும்.

இதே போல உங்கள் மெமரி கார்டில் என்ன Apps உள்ளன என்பதை "On SD Card" என்ற பக்கத்தில் காட்டும்.


Phone Only என்ற பக்கத்தில் Phone Memeory - இல் உள்ள அப்ளிகேஷன்கள் இருக்கும். இவற்றை நீங்கள் மெமரி கார்டுக்கு move செய்ய இயலாது.

இந்த App 2 SD-யின் மற்றுமொரு சிறப்பம்சம், நீங்கள் இன்ஸ்டால் செய்து இருக்கும் Applicationsஎடுத்துக் கொள்ளும் Cache மெமரியை Clear செய்யும் வசதி.




Or Scan This QR Code

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget