
விருந்து நிகழ்ச்சிகள், கலை விழாக்கள், பார்ட்டிகள், விடுதிகளில் இசை தொகுப்புகளை தொகுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப பாட்டு மற்றும் ஆல்பங்களை ஒலிக்க செய்பவர் டிஸ்க் ஜாக்கி. (சவுண்ட் சர்வீஸ்).
ஸ்டார் ஓட்டல்களில் நடக்கும்
READ MORE
பார்ட்டிகள், டிஸ்கொதேக்களில் இவருக்கு மவுசு அதிகம். இங்கிலாந்தின் வொர்சஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள பெர்ஷோர் நகரை சேர்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ், டிஸ்க் ஜாக்கியாக இருக்கிறார்.
டிபிஎப்எம் ஆன்லைன் என்ற இணையதளத்தில் டிஜேயாக இருந்தார். இவரது 6 வயது மகள் ஆம்பர் ஜேக்கப்ஸ். கடந்த 6 மாதம் முன்பு அப்பாவுடன் சேர்ந்து ஆன்லைன் ஸ்டேஷனில் இவரும் பாட்டுகளை தொகுத்தளிக்க ஆரம்பித்தார்.
இவருக்கும் ரசிகர்கள் குவியவே நம்பர் ஒன் டிஜேயாகிவிட்டார் சுட்டிப் பெண் ஆம்பர். உலகிலேயே குறைந்த வயது டிஜே என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் ஆம்பருக்கு இங்கி லாந்து முழுவதும் வாழ்த்துகன்றன.
No comments:
Post a Comment