/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, October 13, 2012

ஒரே ஈமெயில் ஐடி மூலம் பல ட்விட்டர் அக்கௌன்ட்களை உருவாக்குவது எப்படி?



ட்விட்டர் தளம் நிறைய பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளம். பேஸ்புக் போல அன்றி சில சமயம் இதில் நமக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகள் தேவைப்படலாம், அவற்றை உருவாக்க புதிய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரி மூலம் பல ட்விட்டர் அக்கௌன்ட்களை உருவாக்கலாம். இதற்கு நீங்கள் ஜிமெயில் ஐடியை மட்டுமே பயன்படுத்த இயலும்.

1. முதலில் ட்விட்டர் தளத்துக்கு செல்லுங்கள்."New to Twitter?" பகுதியில் நீங்கள் Sign-up செய்யலாம். 

2. ட்விட்டர் கணக்கின் பெயர் முதலில் கொடுக்க வேண்டும். அடுத்து மின்னஞ்சல் முகவரி கொடுக்கும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரியில் ஒரு சிறு மாற்றம் செய்ய வேண்டும். உதாரணமாக ஏற்கனவே ட்விட்டர் கணக்கு உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி example@gmail.com என்றால்  இப்போது ex.ample@gmail.com என்று கொடுங்கள். 

எங்கு வேண்டும் என்றாலும் புள்ளி வைக்கலாம், எத்தனை வேண்டும் என்றாலும் வைக்கலாம். :-) 



3. இப்போது அடுத்த பக்கத்தில் User Name கொடுத்து உங்கள் கணக்கை நீங்கள் உருவாக்கலாம். 

4. உங்களின் மின்னஞ்சல் கணக்குக்கு சென்று பார்த்தால் ட்விட்டர் தளத்தில் இருந்து Confirmation Email வந்து இருக்கும். அதை உறுதி செய்து விட்டு உங்கள் கணக்கை நீங்கள் தொடரலாம். 


5. இதே போல example@gmail.com என்பதற்கு பதிலாக example@googlemail.com என்பதையும் பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget