இணையமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன டொரண்ட் இணைய தளங்கள். சில தமிழ் தளங்கள் கூட இருக்கின்றன. கூகுளாடிப் பார்த்து தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இந்த டொரண்ட் தளங்கள், தங்கள் வெப்-சர்வரில் ட்ராக்கர் மென்பொருளை நிறுவியிருப்பார்கள். தளங்களின் ட்ராக்கர்களுக்கு ஏற்ப தங்களுக்கான ட்ராக்கருக்கான உரல் பற்றிய தகவல்களை வழங்குவார்கள், இது குறித்து மேலும் டொரண்ட் கோப்புகளை உருவாக்குதல் குறித்து சொல்லும் போது பார்ப்போம். பல தளங்கள் அனைவருக்கும் சேவைகளை வழங்கினாலும், சில தளங்கள் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டுமே சேவைகளை அளிக்கின்றன.
டொரண்ட் அமைக்கும் வலையமைப்பு என்பது உங்கள் கணினியின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட விஷயம். ஆகையால் தளங்களின் தேர்வு, மற்றும் தரவிறக்கம் செய்யப் போகும் முன் அதனைப் பற்றிய அனுபவக்குறிப்புகள் படித்துத் தெரிந்து கொண்டு துவங்க வேண்டும்.
இந்த பாதுகாப்புக் காரணங்கள், மற்றும் தொடர்ந்து எண்ணிக்கையிலும், அளவிலும் பெரிய கோப்புக்களைத் தொடர்ந்து பயனாளர்களுக்கு வழங்கவும் டொரண்ட் தளங்கள் தங்கள் தேவைக்கேற்ப விதிகள் வைத்துள்ளன. உதாரணத்திற்கு சில தளங்களில் நீங்கள் உறுப்பினராக பதிவு செய்ய ஏற்கனவே பதிவு செய்து நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பினரின் சிபாரிசு (reference) தேவை. இதன் மூலம்
READ MORE
பயனாளர்களிம் நம்பகத்தன்மை மற்றும் தளத்தின் பயனாளர்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பான களம் ஏற்பட இயன்ற அளவுக்கு உறுதி செய்து கொள்கிறார்கள்.
READ MORE
பயனாளர்களிம் நம்பகத்தன்மை மற்றும் தளத்தின் பயனாளர்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பான களம் ஏற்பட இயன்ற அளவுக்கு உறுதி செய்து கொள்கிறார்கள்.
வெறும் பாதுகாப்பு மற்றும் நம்பகமான பயனாளர்கள் மட்டுமே ஒரு தளம் வெற்றிகரமாக இயங்கப் போதாது. அதற்கு பலதரப்பட்ட, பிரபலமான, தேவை அதிகமுள்ள கோப்புகள் வழங்கத் த்யாராக் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் தளத்தில் கூட்டம் அதிமாகும்.. கூட்டம் அதிகமாக, அதிகமாக அந்த தளத்தின் தரவிறக்க வேகம் அதிகமாகும். வேகம் அதிகமானால் மேலும் கூட்டம் வரும். ஒரு கட்டத்தில் கூட்டம் கூட்டமாக அலைமோதும், அப்படிப்பட்ட சமயங்களில் "சில மணிகளில் சில GB க்கள் " அப்படின்னு கலக்கலாம்.
இந்த டொரண்ட் தளங்களால் தொடர்ந்து வழங்கப்படும் கோப்புகளுக்கும் ஒரு அள்வுமுறை உண்டு. இதை சமாளிக்க இந்த தளங்கள் தங்கள் பயனாளர்களைப் பயன் படுத்துகின்றனர். அதாவது ஒவ்வொரு பயனாளரும் தங்கள் தரவிறக்க விகிதத்தை சராசரியாக 1 அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே புதிய தரவிறக்கங்களை அனுமதிப்பார்கள். தரவிறக்க விகிதம் என்பது எவ்வளவு அளவு கோப்புகள் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு அளவு நீங்கள் மற்றவர்களுக்கு வழங்கியிருக்கிறீர்கள் இடையேயான விகிதாச்சாரம். புத்தப் புதிய பயனாளர்களுக்கு இலவ்சமாக இந்த தரவிறக்க விகிதாச்சாரம் 1 அல்லது 2 என்று நிர்ணயிப்பார்கள். தொடர்ந்து வெறுமனே தரவிறக்கம் மட்டும் செய்யாமல் மற்றவர்களிடமும் பகிர்ந்து (seeding)அதனைத் தக்க வைத்துக் காத்துக் கொள்வது அவரவர் சாமார்த்தியம்.
உங்களின் தரவிறக்க விகிதம் அதிமானால் தளத்தில் உங்களிடம் மிகுந்த கரிசனம் காட்டப்படும், அவர்களின் நட்சத்திர பயனாளராகக் கருதப்படுவீர்கள். உங்களின் ஹார்ட் டிஸ்க்கின் காலியிடத்திற்கேற்ப தரவிறக்கம் செய்த கோப்புகளை நீக்காமல் வைத்திருந்து, சிறிது காலத்திற்காவது டொரண்ட் மென்பொருள் மூலம் மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தல் நன்று.
பதிவிறக்கம் மற்றும் பகிர்ந்து கொள்ளுதலை எப்படி செய்வது ?. ஒரு டொரண்ட் தளத்தில் இருந்து உங்களுக்குத் தேவையான டொரண்ட் கோப்பைத் தரவிறக்கம் செய்து, பின் டொரண்ட் மென்பொருள் மூலம் திறக்கவும். அதன் பின் தரவிறக்கம் செய்யப்போகும் கோப்புகளை உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் எங்கு சேமிக்க வேண்டும் என்று தெரிவிக்கவும். உடனே உங்கள் கோப்புகளுக்கு எத்தனை சீடர்ஸ் (seeders), எத்தனை பியர்ஸ் (peers) மற்றும் தரவிறக்க வேகம், அந்த கோப்புகளுக்கான தரவிறக்க விகிதம் ஆகியவற்றைக் காணலாம். இந்த நிலையில் உங்கள் கணினி டொரண்ட் வலையமைப்பில் பியர்ஸ்களில் (peers) ஒன்றாக இருக்கும். (படங்களைக் க்ளிக்கிப் பெரிதாக்கிக் காண்க.)
தொடர்ந்து உங்கள் டொரண்ட் மென்பொருளை இயக்கத்தினிலேயே வைத்திருக்க வேண்டும். தரவிறக்கம் செய்து முடிந்தவுடன், தானாகவே மென்பொருள் உங்கள் கணினியின் நிலையை சீடர்ஸ் (seeders) என்று வலையமைப்பில் மாற்றிக் கொள்ளும், தொடர்ந்து கோப்புகளை மற்றவர்க்குப் பகிர்ந்தளிக்க ஆரம்பித்து விடும். உங்கள் கணினியின் நிலை மாற்றங்கள், தரவிறக்க நிலைகள் அனைத்தும் சீரான நேர இடைவெளியில் டொரண்ட் மென்பொருள் மூலம் ட்ராக்கருக்குத் தெரிவிக்கப் பட்டுக் கொண்டே இருக்கும்.
தொடர்ந்து டொரண்ட் உபயோகிப்பவர்கள் தங்கள் கணினிகளை 24x7 இயக்கத்திலேயே தான் வைத்திருப்பார்கள், மாதக்கணக்கில். சூடு தாங்காமல் கணினிகள் கட்டாய ஓய்வு எடுக்கும் வரை போட்டுத் தாக்கும் தீவிர டொரண்ட் பயனாளர்களும் கூட இருக்கிறார்கள். கன்னிகளும், கணினிகளும் சூடு தாங்க மாட்டாத காரணத்தால் :D, தொடர்ந்து டொரண்ட் மட்டுமன்றி வேறு காரணங்களுக்காகவும் தொடர்ந்து கணினிகளை உபயோகத்தில் வைத்திருப்பவர்கள் சூட்டைத் தணிக்க தகுந்த ஏற்பாடு செய்து கொள்ளவும்.
நீங்கள் தரவிறக்கம் செய்யும் போது கூட்டம் ஜே ஜே அல்லது கே கே (நடுநிலை விளக்கம் :D) என்றிருந்தால், தரவிறக்கத்தின் வேகம் அதிகமாகி உங்கள் இணைய இணைப்பின் பலுக்கத்தின் ( பலுக்கம்=bandwith :o) பெரும்பான்மையை டொரண்ட் மென்பொருள் பாவிக்கத் தொடங்கும். கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டே மற்ற இணையப் பணிகளைத் தொடர வேண்டிய கட்டாயத்திலோ அல்லது அவசரத்திலோ இருக்கும் அன்பர்கள், மென்பொருளின் பலுக்க உபயோகத்தை (bandwidth usage) நெறிப்படுத்திக் கொள்ளும் வசதிகளும் டொரண்ட் மென்பொருட்களில் உள்ளது, பயன்படுத்தி மகிழ்ச்சியடைவோர் வரவேற்கப்படுகின்றனர். அலுவலக வலையமைப்பிலோ அல்லது ஏதேனும் கூட்டத்தில் (LAN) டொரண்ட் கும்மியடிப்பவர்கள் அதிக வேகம் காரணமாக கையும் களவுமாக பிடிபட வாய்ப்புகள் அதிகம் என்ற நிலையில் இருப்பவர்களும் இந்த வேக நெறிப்படுத்தலை பயன்படுத்திக் கொள்ளலாம். வலையமைப்பு பாதுகாப்பு (network security) மற்றும் பலுக்க மேலாண்மைக்காகவும் (bandwidth management) பெரும்பாலான பணியிடங்களில் டொரண்ட் சங்கதிகள் தடைசெய்து வைத்திருப்பார்கள்.
No comments:
Post a Comment