/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, September 24, 2012

இதுவரை தெரியாத புதிய மீடியா ப்ளேயர்கள்!!!




மீடியா ப்ளேயர் என்றால் நமக்கு வருவது  விண்டோஸ் மீடியா ப்ளேயர் தான் இது மட்டுமல்லாமல் எத்தனையோ மீடியா மென்பொருட்கள் இருக்கிறது.   யாரும் இதுவரை பார்த்திராத மென்பொருட்கள் கூட மிகவும் அருமையாக இருக்கும்.   ஆனால் அறிமுகப்படுத்தும் வரைதான்  அது அறிமுகப்படுத்தி விட்டால் நம் வாசகர்கள் அதை பிடித்து ஒரு ரோடே போட்டு விடுவார்கள்.  எனக்கு தெரிந்த சிலமீடியா ப்ளேயர்கள் கீழே.  விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர் போன்றவை எல்லாருக்கும் தெரிந்தது இது மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு தெரியாத சில மீடியா ப்ளேயர்கள் .



 AL Player

இந்த ப்ளேயர் பெயர் AL Player இந்த் AL என்பது Always அதாவது எதையும் ப்ளே செய்ய கூடியது என்பதாகும்.  இந்த மென்பொருள் நீங்கள் ப்ளே செய்யும் வீடியோ கோப்பின் கோடெக் என்பது இல்லை என்றால் கூட தானாகவே இணையத்தில் இருந்து தரவிறக்கி பதிந்து கொண்டு ப்ளே செய்ய கூடியது.

ஒரு கீ மூலம் நாம் சத்தத்தை Mute செய்ய முடியும்.  அந்த கீ ESC கீ ஆகும்.
திரும்ப அந்த கீயை உபயோகிப்பதன் மூலம் சத்தத்தினை திரும்ப பெற முடியும்.














இது ப்ளேயர் மட்டுமல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோக்களை எளிதாக ரெகார்ட் செய்யவும் செய்கிறது.

இந்த AL Player தரவிறக்க சுட்டி

AL Player குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி


DA Player

DA Player or DigiArty Player  இந்த ப்ளேயர் அனைத்து வகை பார்மெட் ப்ளே செய்கிறது.  இது உயர்தர கோப்புகள் 1080p கோப்புகளை ப்ளே செய்யும் பொழுதும் குறைந்த மின்சக்தியினை உபயோகிக்கிறது..




இந்த மென்பொருள் ப்ளூரே, டிவ் எக்ஸ், எம்கேவி போன்ற அனைத்து வகை கோப்புகளையும் கையாள்கிறது.

இதை தரவிறக்க சுட்டி

DA Player குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி


Daum Pot Player

இந்த மென்பொருளும் அனைத்தையும் ப்ளே செய்கிறது.  இந்த மென்பொருள் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது என்பதுவே இதன் சிறப்பு.
Daum Pot Player மென்பொருளை தரவிறக்க சுட்டி

Daum Pot Player மென்பொருள் குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி


MPCSTAR Player

இந்த மென்பொருள் அனைத்து வகையான கோப்புகளையும் கையாள்கிறது.  நாம் வீடியோ ப்ளே செய்யும் பொழுது ஒரு சப்டைட்டில் மட்டுமே ப்ளே செய்து பார்ப்போம். ( பார்க்கவும் முடியும் )  இதில் இரண்டு சப்டைட்டில்களை தேர்வு செய்து பார்க்க முடியும்.

நீங்கள் எம்பி3 பாடல்களை கேட்கும் பொழுது இணையத்தில் இருந்து பாடல் வரிகளை தானாக இறக்கி காட்டும்.

MPCStar Media Player மென்பொருள் தரவிறக்க சுட்டி


Read more: http://www.gouthaminfotech.com/2011/12/media-players-for-new-versins-available.html#ixzz27OKE6kj4

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget