ஆப்பிள் நிறுவனத்தின் தொழிற்நுட்பத்தை கொரியாவின் சாம்சங் நிறுவனம் திருடியதாக ஆப்பிள் நிறுவனம் 5,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி பல்வேறு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த, அமெரிக்க நீதிமன்றம், "சாம்சங்' நிறுவனத்துக்கு, 5,550 கோடி ரூபாய் (நூறு கோடி டாலர்) அபராதம் விதித்து, உத்தரவிட்டது அறிந்ததே.
ஆனால் சாம்சங்' நிறுவனத்தின் மீது, "ஆப்பிள்' நிறுவனம் தொடர்ந்த வழக்கை,
ஜப்பான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கை விசாரித்த ஜப்பானிய நீதிபதி டமோட்சு ஐ.என்.சி., " 'ஸ்மார்ட் போன்' மற்றும் 'கைக்கணினி' ஆகியவற்றில் ஒளிப்படம் மற்றும் இசை பதிவுகளை பரிமாறும் மென்பொருள் தொழிற்நுட்பத்தை திருடியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆய்வு செய்து பார்த்த போது, சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள தொழிற்நுட்பங்கள் ஒரே மாதிரியானவையாக இல்லை. எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்படுகிறது" என்று தீர்ப்பு கூறியுள்ளார்.ஆனால் சாம்சங்' நிறுவனத்தின் மீது, "ஆப்பிள்' நிறுவனம் தொடர்ந்த வழக்கை,
No comments:
Post a Comment