/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, September 13, 2012

ஆப்பிள் ஐபோன் ஐந்து (iPhone 5):



ஐபோன் 5 அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ள அரங்கு


ஆப்பிள்  நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று ஐபோனின் புதிய பதிப்பாக iPhone 5-யை அறிமுகப்படுத்தவுள்ளது. பல்வேறு மாற்றங்களுடன், புதிய வசதிகள் பலவும் வரலாம் என தெரிகிறது. மேலும் iOS இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான iOS 6-ஐயும் வெளியிடவுள்ளது.

பழிக்கு பழி?

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் சாதனங்களை காப்பி அடித்ததற்காக 5800 கோடி ரூபாய் அபராதம் பெற்றது. இந்நிலையில் இன்று வெளியாகவிருக்கும் ஐபோனில் 4G LTE (Long Term Evolution) என்னும் அதிவேக தொழில்நுட்பம் பயன்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த LTE தொழில்நுட்பத்திற்கு சாம்சங் நிறுவனம் காப்புரிமை (Patent) வைத்துள்ளது. இதனால் ஆப்பிள் மீது வழக்கு தொடுக்க தயாராகி வருகிறது சாம்சங் நிறுவனம்.

ஐபோனுக்கான  புதிய யூட்யூப் அப்ளிகேசன்:

ஐபோனின் முதல் பதிப்பிலிருந்து ஆப்பிளே உருவாக்கிய "யூட்யூப் அப்ளிகேசன்" இருந்து வந்தது. iOS ஆறிலிருந்து அதனை நீக்கப்போவதாக முன்பே ஆப்பிள் நிறுவனம் அறிவித்துவிட்டது. இந்நிலையில் ஐபோன் மற்றும் ஐபோட் டச் சாதனங்களுக்காக பிரத்யேக யூட்யூப் அப்ளிகேசனை யூட்யூப் அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடியோக்களில் விளம்பரம் காட்டுவதற்கான வாய்ப்பையும் கூகுள் பெற்றுள்ளது. இது கூகுள் நிறுவனத்துக்கு சாதகமாகவே அமையும் என நினைக்கிறேன்.

ஐபோன்களுக்கான யூட்யூப் அப்ளிகேசன் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள். 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget