பெரும்பாலோனோர் படிக்க எளிதாய் இருக்க தங்களது கோப்புகளை PDF Format-இல் வைத்து இருப்பார்கள். ஆனால் ஏதேனும் புதிய கணினி அல்லது PDF Reader இல்லாத கணினிகளில் அவற்றை திறக்க முடியாமல் சிரமப்படுவார்கள். உங்களிடம் Firfox Browser இருந்தால் இனி நீங்கள் எளிதாக அதில் PDF File - ஐ ஓபன் செய்யலாம்.
1. இதற்கு நீங்கள் புதிய Firfox Version -ஐ பயன்படுத்த வேண்டும். உங்களுடைய Version- ஐ பார்க்க Help >> About Firefox. என்பதில் அறியலாம். தற்போதைய புதிய பதிப்பு 15.0. புதிய ஒன்றை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் - Mozilla Firefox
2. இப்போது URL Address Bar- இல் “about:config” என்று Type செய்து enter கொடுங்கள். இப்போது வரும் பகுதியில் “I’ll be careful, I Promise !” என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
3. இப்போது வரும் பக்கத்தில் Search வசதி இருக்கும். அதில் "browser.preferences.inContent" என்பதை தேடவும். Result வந்த உடன் அதில் Right Click செய்து Toggle என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது Status என்பது Default என்பதில் இருந்து User Set க்கும், Value என்பது False என்பதில் இருந்து True என ஆகி இருக்கும்.
5. அடுத்து "pdfjs.disabled" என்பதை தேடவும். Result வந்த உடன் அதில் Right Click செய்து Toggle என்பதை கிளிக் செய்யுங்கள்.
6. இப்போது Status என்பது Default என்பதில் இருந்து User Set க்கும், Value என்பது True என்பதில் இருந்து False என ஆகி இருக்கும்.
7. அவ்வளவு தான் இனி PDF File -களை எளிதாக ஓபன் செய்து படிக்கலாம்.
No comments:
Post a Comment