பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம் வரவேற்பு குவிந்திருக்கிறது.முதல் ஒரு மணி நேரத்திலேயே 8 லட்சம் லைக்குகளுக்கு மேல் கிடைத்திருக்கிறது.
இப்படி ஒரு வரவேற்பு பேஸ்புக்கில் வேறு எந்த பிரபலத்திற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.அமிதாப் பாவிவுட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல இண்டெர்நெட்டிலும் அவர் சூப்பர் ஸ்டாராக தான் இருக்கிறார்.அதாவது இணைய உலகிலும் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.படிக்கப்படுகிறார்.பின் தொட்ரப்படுகிறார்.
இந்த அபிமானத்திற்கும் வரவேற்பிற்கும் காரணம் அமிதாப் இண்டெர்நெட்டை சரியாக பயன்படுத்துகிறார் என்பதே.பயன்படுத்துகிறார் என்றால் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளவோ தனது சாதனைகளை மார் தட்டி கொள்ளவோ அல்ல! மாறாக தனது ரசிகர்களை
நேரடியாக தொடர்பு கொள்ள,அவர்களுடன் பேச,தன்னை வெளிப்படுத்தி கொள்வதிலேயே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.அவரது வலைப்பதிவிலும் டிவிட்டர் பக்கத்திலும் இதனை பார்க்கலாம்.
அமிதாப் பற்றிய செய்திகளை ரசிகர்கள் தெரரிந்து கொள்ள விரும்பினால் நாளிதழ்களையோ டிவிக்களையோ நாட வேண்டியதில்லை.அவருடைய டம்ப்ளர் வலைப்பதிவை பின்தொடர்ந்தாலே போதுமானது.இன்னும் கூடுதல் தகவல்கள் தேவை என்றால் அவரது டிவிட்டர் பக்கத்தை கவனித்தால் போதுமானது.
வலைப்பதிவு செய்வதிலும் சரி டிவிட்டரில் பதிவிடுவதிலும் சரி அமிதாப் அந்த அளவுக்கு தீவிரமும் சுறுசுறுப்பும் காட்டி வருகிறார்.
ஒரு நட்சத்திரத்தை பற்றி அறிய ரசிகர்களுக்கு ஆர்வம் உள்ளவற்றை எல்லாம் அமிதாப் தானே வலைப்பதிவு மூலம் வெளியிட்டு வருகிறார்.படப்பிடிப்பு அனுபவங்கள்,பங்கேற்கும் நிகழ்ச்சிகள்,மன உணர்வுகள் என எல்லாவற்றையும் பற்றி அவர் பதிவு எழுதுகிறார்.
அவருடைய வலைப்பதிவுகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதோடு அமிதாப் என்னும் நடத்திரத்தின் வாழ்க்கை பக்கத்தை படித்தது போன்ற உணர்வையும் தரும்.ஒரு நெருங்கிய நண்பனிடம் பேசுவது போல அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
அமிதாப் பதிவுகள் எல்லாம் கேள்வி கேட்கப்படாத பேட்டிகள் போல இருக்கும்.அல்லது ரசிகர்கள் கேட்க நினைத்த கேள்விகளுக்கான பதிலாக இருக்கும்.
அதானல் தான் பால் நேரங்களில் மீடியாக்களே கூட வலைப்பதிவில் அமிதாப் சொல்வதை செய்தியாக வெளியிடுகின்றன.
குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அமிதாப் இன்னும் தீவிரமாக இருக்கிறார்.
குடும்ப நிககழ்வுகள் பற்றியும் நாட்டு நடப்பு பற்றியும் அவர் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
மருமகள் ஐஸ்வர்யா கர்பமுற்ற போது அமிதாப் மகிழ்ச்சி பொங்க அந்த செய்தியை டிவிட்டரில் தான் முதலில் பகிர்ந்து கொண்டார்.ஒரு தாத்தாவின் மன உணர்வை அதில் பார்க்க முடிந்தது.
அதே போல பேத்திக்கு சூட்டப்பட்ட பெயரையும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.சும்மாயில்லை இது வரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான குறும்பதிவுகளை வெளீயிட்டிருக்கிறார்.அதன் பயனாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை பெற்றிருக்கிறார்.
இப்படி சைபர் ராஜாவாக விளங்கும் அமிதாப் இப்போது பேஸ்புக் பக்கம் வந்திருக்கிறார்.
பேஸ்புக்கில் நுழையப்போவதை முதலில் டிவிட்டரில் தான் தெரிவித்தார்.அதன் பிறகு சில மணிநேரங்கள் கழித்து பேஸ்புக்கில் நுழைந்து விட்டதை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.அதற்குள் பேஸ்புக்கில் அவருக்கு லட்சகணக்கில் லைக்குகள் குவிந்து விட்டன.
அருமையான புகைப்படங்களோடு தான் பங்கேற்கும் நிகழ்ச்சி பற்றி தனது மகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி எல்லாம் அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.ஒவ்வொரு பதிவும் தனியே லைக் செய்யப்படுவதோடு அவற்றுக்கான கருத்துக்களும் குவிகின்றன.அருமையான வீடீயோக்களையும் வெளீயிட்டு வருகிறார்.
சமூக வலைப்பின்னல் தளங்களை நட்சத்திரங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்
என்பதற்கு மட்டும் அல்ல எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் அமிதாப் சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
என்பதற்கு மட்டும் அல்ல எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் அமிதாப் சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.:http://www.facebook.com/AmitabhBachchan
No comments:
Post a Comment