இணைய முகவரிகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்கள் என எதனைக் குறிபிட்டாலும், இலவசமாக, ஆன்லைன் வழியாகவே ஸ்கேன் செய்து முடிவுகளைத் தரும் நிறுவனமாக வைரஸ் டோட்டல் இயங்கி வருகிறது.
இதற்கு
நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் குறியீடுகளையும் வழிகளையும் வைரஸ் டோட்டல் பயன்படுத்தி வருகிறது.
கூகுள் இதனை வாங்கியதன் மூலம், வைரஸ் மற்றும் மால்வேர் தேடி அறிவதில், மூலதனம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், நவீன தொழில் நுட்ப வசதிகளும் கிடைக்கும் என வைரஸ் டோட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது.
"எங்களைத் தேடி வரும் வாடிக்கையாளர்களை இணையத்தில் பாதுகாப்பாக வைப்பதுதான் எங்களுடைய முதன்மையான நோக்கம்' என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இந்நிறுவனம் தொடர்ந்து தனியொரு பிரிவாகவே சுதந்திரமாக இயங்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கூகுளைப் பொறுத்தவரை, இணையத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்பதால், இப்பிரிவில் திறமையாகச் செயலாற்றும் வைரஸ் டோட்டல் நிறுவனத்தை வாங்கியதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் தன் குரோம் பிரவுசரைக் கூடுதல் பாதுகாப்பு கொண்டதாக கூகுள் அறிவிக்க உள்ளது.
No comments:
Post a Comment