/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Tuesday, September 11, 2012

பேஸ்புக்கில் நுழைந்தார் சச்சின்!.




திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான் சச்சினும் ஆடுகளத்திற்கு வெளியே அதிக ஆடியதில்லை.அதாவது அதிகம் பேசியதில்லை.அதிலும் தன்னைப்பற்றி அவர் தற்பெருமை அடித்து கொண்டதுமில்லை.அவரது பேட்டிகள் கூட கிரிக்கெட் தொடர்பானதாகவே இருக்கும்.அப்போது கூட பந்துக்கு ஏற்ற ஷாட்டை போல கேள்விக்கேற்ற பதில் தான் வருமே தவிர தேவையில்லாத கருத்துக்கள் இருக்காது.
இந்த அமைதியும் அடக்கமும் தான் சச்சின்.
அவரது பேஸ்புக் பக்கமும் இப்படி தான் இருக்கிறது.
ஆம் சச்சின்
சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் நுழைந்திருக்கிறார்.ஏற்கனவே சச்சின் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் இருக்கிறார்.சச்சின் டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக சொல்ல முடியாது.எப்போதாவது அரிதாக தான் அவர் குறும்பதிவுகளை வெளியிடுகிறார்.அந்த குறும்பதிவுகளும் பெரும்பாலும் கிரிக்கெட் சார்ந்ததாகவே இருக்கின்றன.
ஒலிம்பிக்கின் போது சாய்னாவுக்கும் சுசில் குமாருக்கும் பதக்கம் வென்றவுடன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.மற்றபடி சச்சின் மனதை டிவிட்டரில் அறிய முடியாது.
சச்சினிடம் ஒரு வித கன்னியமான ஒதுங்குதலை காணலாம்.
சச்சினின் பேஸ்புக் பக்கமும் இதே போல தான் இருக்கிறது.
முதலில் சச்சின் தானே இந்த பேஸ்புக் பக்கத்தை உருவாக்கவில்லை.அவரது சார்பாக நிறுவனம் ஒன்று இந்த பக்கத்தை நிர்வகித்து வருகிறது.அதன் காரணமாக இந்த பக்கத்தின் பதிவுகளில் ஒரு வித தொழில்முறைத்தன்மையை காணலாம்.தகவல்கள் நேர்த்தியாக தான் இருக்கின்றன என்றாலும் அதில் சச்சினின் தனிப்பட்ட குரல் இல்லை.
சச்சின் பேஸ்புக் பக்கத்தில் இது சச்சினின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அதிகாரபூர்வ பக்கத்திற்கு அனைவரையும் வரவேற்பதாக குறிப்பிட்டுளள சச்சின் இந்தியாவுக்காக விளைடயாடுவது தனது கனவு என்றும் தனது அனுபவங்களை பேஸ்புக் வாயிலாக பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் உன்முக்த சந்த பற்றி ஒரு பதிவில் குறிப்பிட்டூள்ளார்.ஜுனியர உலககோப்பை இறுதிப்போட்டியை ஐதராபாத் டெஸ்ட்டுக்கு நடுவே டிவியில் ஆர்வத்தோடு பார்த்ததையும் விவரித்திருக்கிறார்.குழந்தை போன்ற இந்த ஆர்வம் தான் சச்சின்!.
மற்ற பதிவுகள் எல்லாம் சச்சின் அடித்த 100 சதங்கள் பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் விவரிக்கின்றன.100 வது சதம்,99 வது சதம் என வரிசையாக ஒவ்வொரு சதம் பற்றியும் அவை அடிக்கப்பட்ட விதம் பற்றியும் விவரிக்கும் இந்த பதிவுகள் சச்சினிஸ்ட்டுகளுக்கு சரியான விருந்து என்று தான் சொல்ல வேண்டும்.
சச்சின் ராஜ்யசபை உறுப்பினராக பதவியேற்றது தொடர்பான பதிவும் உள்ளது.
ஒவ்வொரு பதிவுகளுக்குமான ரசிகர்களின் பின்னூட்டங்கள் தான் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கின்றன.ரசிகர்கள் உருகி உருகி தெரிவித்துள்ள கருத்துக்களை படிக்கும் போது சச்சின் ரசிகர்கள் மனதில் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பிட்ட ஒரு ரசிகர் ஒவ்வொரு பதிவிலும் சச்சின் நான் உங்களை ஆராத்திக்கிறேன் என கூறியுள்ளார்.சச்சின் யுவராஜ சிங்க்கையும் அவரது மன உறுதியையும் பாராட்டி எழுதியுள்ள பதிவில் கூட சச்சின் நீங்கள் மகத்தானவர் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு சில கருத்துக்கள் குறிப்பிட்ட அந்த சதம் தொடர்பான கருத்தாக அமைந்துள்ளன.ஒவ்வொரு பதிவுக்கும் லைக்குகள் குவிந்து கிடக்கிறன.
சச்சின் அதிகாரபூர்வ பக்கம் இது என்றாலும் அவரது பெயரில் வேறு பல பேஸ்புக் பக்கங்களும் இருக்கின்றன.சச்சின் ரசிகர் குழ் பக்கம்,கிரிக்கெட் கடவுள் சச்சினின் பக்கம் என்று சச்சின் உபாசகர்கள் அவரது சார்பில் பேஸ்புக் பக்கங்களை அமைத்துள்ளனர்.
சச்சின் மகன் அர்ஜுன் டென்டுல்கரும் பேஸ்புக்கில் இருக்கிறார்.அவரது பக்கமும் எளிமையாகவே இருக்கிறது.
சச்சினின் பேஸ்புக் முகவரி;https://www.facebook.com/SachinTendulkar
சச்சின் மகனின் பேஸ்புக முகவரி;http://www.facebook.com/aarjuntendulkar

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget