/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Friday, June 29, 2012

யாஹூ ஈமெயில் கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி?



நீங்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட யாகூ ஐடி வைத்துள்ளீர்களா, அதில் ஒன்றை அழிக்க வேண்டுமா? வெகுநாட்களாக உபயோகிக்காமல் வைத்துள்ள யாகூ கணக்கை நீக்க வேண்டுமா? யாகூ மெயிலில் வரும் அதிகமான ஸ்பாம் மெயில்களின் தொல்லையால் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்க வேண்டுமா? இது போன்ற பிரச்சினைகளில் அவதி படுபவர்களாக இருந்தால் உங்களின் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி என கீழே காணலாம்.


  • யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்க முதலில் இந்த லிங்கில் சென்று உங்களின் யாஹூ ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லுங்கள்.
  • அதில் உங்கள் கணக்கை அழிப்பதற்கான பக்கம் ஓபன் ஆகும் அதில் மேலும் ஒரு முறை உங்களின் அனுமதியை கேட்கும். 
  • திரும்பவும் உங்களின் பாஸ்வேர்ட் கொடுத்து கீழே உள்ள Word Verification எழுத்துக்களை சரியாக நிரப்பவும். 
  • சரியாக கொடுத்த பின்னர் கீழே உள்ள Terminate This Account என்ற பட்டனை அழுத்தவும்.


Terminate This Account பட்டனை அழுத்தியவுடன் தற்காலிகமாக உங்களின் கணக்கு செயலிழந்து விடும். நிரந்தரமாக அழிப்பதற்கான உங்களின் கோரிக்கை யாஹூ நிறுவனத்திற்கு சென்று விடும். அவர்கள் 90 நாட்கள் வரை உங்களின் கணக்கு விவரங்களை பாதுகாத்து வைத்திருப்பார். ஒருவேளை நீங்கள் தவறுதலாக அழித்து விட்டீர்கள் திரும்பவும் அந்த கணக்கை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அந்த 90 நாட்களுக்குள் திரும்பவும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.90 நாட்களுக்கு பிறகு உங்கள் கணக்கு நிரந்தரமாக அழிக்கப்பட்டு விடும்.

நீங்கள் யாஹூ ஈமெயில் ஐடியை அழித்தால் யாஹூவின் மற்ற சேவைகளான Answers, Address book, profiles போன்ற மற்ற சேவைகளில் இருந்தும் உங்களின் தகவல்கள் நீக்கப்படும். ஆகவே யாஹூ கணக்கை அழிப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்படவும்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget