ஆஸ்திரேலிய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அபார வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
முதலிரு டெஸ்ட் போட்டிகளையும் சமநிலைப்படுத்திய ஆஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் இப் போட்டியுடன்
READ MORE
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து மைதானத்திலிருந்து பிரியாவிடை பெற்றது, ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு உணர்ச்சிகரமான தருணமாக்கியது.READ MORE
இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 225 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 569 ஓட்டங்களும் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 163 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 322 ஓட்டங்களையும் மாத்திரமே எடுத்து தோல்வி அடைந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிக்கி பாண்டிங் தனது முதல் இன்னிங்ஸில் 7 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்களையும் மாத்திரமே எடுத்தார். இந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியிலும் அவரால் பிரகாசிக்க முடியாது போனது துரதிஷ்டம். இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட அரங்கில் உள் நுழைந்த போது தென்னாபிரிக்க வீரர்கள் வரிசையாக இரு மருங்கிலும் நின்று கைதட்டி அவரை வரவேற்றனர். மைதான அரங்கிற்கு பாண்டிங்கின் மனைவியும் வந்திருந்தார்.
8 ரன்கள் பெற்றிருந்த போது ஜேக் கேலிஸிடம் ஸிலிப்பில் பிடிகொடுத்து ஆட்டமிழந்த போது மைதானத்திலிருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி பாண்டிங்குக்கு பிரியாவிடை கொடுத்தனர். 'Thanks Ricky' எனும் கோஷங்ள் ஒலித்துக்கொண்டிருக்க, பாண்டிங் உணர்ச்சிவசமாக அரங்கிலிருந்து வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் அடுத்த டெஸ்ட் தொடர் இலங்கையுடன் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment