/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, July 18, 2013

They left the studies on the ...but popularized ...!

இவர்கள் படிப்பை பாதியில் துறந்தனர்… ஆனாலும் பிரபலாமனார்கள்…! 

படிப்பின் அவசியத்தை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். ஆனால் முறையாக பள்ளிக்கல்வியை முடிக்காத பலர் எட்ட முடியாத உயரத்தை எட்டிய அதிசயமும் வரலாற்றுப் பக்கங்களில் இடம் இருக்கிறது.

 


















 அப்படிப்பட்டவர்கள் பற்றி ஒரு சில சவாரஸ்ய தகவல்கள்.
கடின உழைப்பு, விடாமுயற்சி, விவேகம், இப்படி பல குணாதிசயங்களால் கோபுரத்தை அடைந்த சிலரைப் பற்றிய தகவல்கள் தான் இவை.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது படைப்புகளுக்கு மயங்காதவர்கள் இல்லை. ஆம் விதவிதமான


கார்டூன்களை அனிமேட் செய்த இவர் 16 வயதிலேயே பள்ளிப் படிப்பை கைவிட்டார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றிய இவர் பின்நாளில் அகிலம் போற்றும் அளவிற்கு உயர்ந்தார். அவரை கவுரவிக்கும் வகையில் அவரது 58வது வயதில் அவருக்கு கவுரவ டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது.
குடும்பச் சூழல் காரணமாக 12 வயதில் படிப்பைத் துறந்து வேலைக்குச் செல்லத் துவங்கியவர் 22 வயதில் ஒரு பத்திரிகையில் நிருபரானார். தேர்தல் பிரசாரங்கள், தேர்தல் களம் குறித்த இவரது சுவாரஸ்ய செய்திகள் பரவலாக பேசப்பட்டது. இவர் தான் பின்நாளில் மிகப் பெரிய காவியங்களை படைத்த எழுத்தாளரானார்.அவர் வேறு யாரும் இல்லை..சார்லஸ் டிக்கென்ஸ் புகழ் பெற்ற எழுத்தாளர்.
மின் விளக்கைக் கண்டுபிடித்து வெளிச்சத்தை தந்த தாமஸ் ஆல்வா எடிசன் சிறு வயதிலேயே பள்ளிக்கு முழுக்கு போட்டவர் தான்.
இன்றளவும் வியந்து பார்க்கக் கூடிய அளவிற்கு பெருமை வாய்ந்த அரசியல்வாதி, ராஜதந்திரி, எழுத்தாளர், விஞ்ஞானி பெஞ்சமின் பிரான்கிளின். 10 வயதோடு பள்ளிப் படிப்பை துறந்தவர் இவர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், படிப்பை பாதியிலேயே துறந்தவர் தான்.
சரியாக 15 வயதில் பள்ளிப் படிப்பை துறந்தவர் தான் பின் நாளில் நோபல் பரிசு பெறும் அளவிற்கு மிகப் பெரிய இயற்பியல் விஞ்ஞானியானார். அவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற மேதை.
உலகப் புகழ் பெற்ற இளவரசி டயானா திருமணத்திற்கு முன்னர் ஒரு மழலையர் பள்ளிக்கூடத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார் என்பது தெரியும் ஆனால் 16 வயதுடன் பள்ளிக்கல்வியை முடித்துக் கொண்டவர் டயானா என்பது தெரியுமா?
இவர்களில் பலரும் பிரபலமான பின்னர் தனிப்பட்ட ஆர்வத்தாலும், கல்வியின் மகத்துவத்தை உணர்ந்தும் உயர்கல்வியை மேற்கொண்டனர் என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget