/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Tuesday, February 7, 2012

கூகுளில் மறைந்துள்ள Pacman Game விளையாடுவது எப்படி?

கூகுள்(google) தேடியந்திரத்தில் சில இதர வசதிகளும் மறைந்து உள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க போவது கூகுள் முகப்பு பக்கத்தில் விளையாடும் வசதி. பிரபல விளையாட்டான Pacman விளையாட்டு பெருமாலானவர்களுக்கு தெரிந்திர்க்கும். இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டால் நிறுத்த மனம் வராது. மிக சுவாரஸ்யமான இந்த விளையாட்டை கூகுளின் முகப்பு பக்கத்தில் எப்படி விளையாடுவது என பார்க்கலாம்.

pacman விளையாட்டு என்பது காவலர்களிடம் சிக்காமல் அங்குள்ள இலக்குகளை அனைத்தையும் அழிக்க வேண்டும். கீபோர்டில் உள்ள arrow கீகளை பயன்படுத்தி பாதையை மாற்றி மிகவும் சுவாரஸ்யமாக விளையாடலாம்.

கூகுள் URLக்கு பக்கத்தில் pacman என்று கொடுத்து என்டர் அழுத்தினால் போதும் pacman விளையாட்டு வந்து விடும்.

இதை விளையாட -www.google.com/pacman


Password இல்லாமல் நம் முகத்தைக் காட்டி நுழைய

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம்.  கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது Hollywood படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.
இதற்காக பலமென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் Install செய்துகொள்ள வேண்டியது தான். Webcam அல்லது மடிக்கணினியுடன் வரும் Camera முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.

  • Windows Vista மற்றும் Windows7 Operating Systemல் இயங்கும் .
  • இதன் 32 பிட் மற்றும் 64 பிட் Version கிடைக்கிறது. 
  • மென்பொருளின் அளவு 8.3 MB தான்.  

மென்பொருளை தரவிறக்க  சுட்டி

Monday, February 6, 2012

வே2 எஸ்.எம்.எஸ். (Way2Sms) விரிவாக்கம்
இலவசமாக இரு நண்பர்களுக்கிடையே எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்ப உதவிடும் தளமான "வே 2 எஸ்.எம்.எஸ்.' (Way2Sms.com) அண்மையில் இதே போல இயங்கும் "160 பை 2 டாட் காம் (160by2.com)’ என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது.

Way2online என்ற நிறுவனம் இதனை இயக்கி வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதன்வாடிக்கையாளர் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சமாக உயர இருக்கிறது. அத்துடன் இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 35% பேர் இந்த தளத்தில்பதிந்தவர்களாக இருப்பார்கள்.

தற்போது இந்நிறுவனத்திடம் 2.3 கோடி பேர்கள் பதிந்த வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதுவரை இந்த இரு தளங்களும் மாதந்தோறும் பத்து லட்சம் என்ற அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வந்தன. இதன் மூலம் இனி வே 2 எஸ்.எம்.எஸ். நிறுவனம், இந்தியாவின் முன்னணி இன்டர்நெட் நிறுவனமாக இடம் பெறும்.

வே 2 எஸ்.எம்.எஸ். 2006 ஆம் ஆண்டில் வன பாலா என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் டெக்ஸ்ட் மெசேஜிங், சேட், இமெயில் மற்றும் சோஷியல் மீடியா செய்திகளை இலவசமாகப் பரிமாறிக் கொள்ளலாம். இந்தியாவில் இயங்கும் சி.டி.எம்.ஏ மற்றும் ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்திகளை இந்த தளம் மூலம் அனுப்பலாம். செய்தி ஒன்றில் 160 கேரக்டர்கள் மட்டுமே இருக்க முடியும்.

அத்துடன் ஜிசேட், யாஹூ, பேஸ்புக் தளங்களில் மேற்கொள்வது போல ஒருவருக்கொருவர் டெக்ஸ்ட் வழி சேட் செய்திடமுடியும். உலகில் அதிகம் பயன்படுத்தும் இணைய தள வரிசையில், இது சென்ற மாதம் 509 ஆவது இடத்தையும், இந்தியாவில் 34 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது.


இந்த தளத்திற்கு ஏறத்தாழ 30 நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஏழு லட்சம் புதிய பயனாளர்கள் பதிந்து கொண்டு வருகின்றனர். சென்ற ஆண்டில் கூகுள் தேடல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட தளங்களில் முதல் பத்து இடத்தில் வே 2 எஸ்.எம்.எஸ். இடம் பெற்றிருந்தது.

160by2.com நிறுவனம் 2003ல் இதே போல் தொடங்கப்பட்டது. ஹைதராபாத்தில் தலைமை அலுவலகம் இருந்தாலும், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் இதற்கு கிளை அலுவலகங்கள் இயங்குகின்றன
Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த

இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Skype மென்பொருளின் புது வசதிகள்:

1. HD Video Calling – உங்களிடம் நல்ல வெப்கேமிரா, இணைய இணைப்பு இருப்பின் துல்லியமான வீடியோ காலிங் வசதியை அனுபவிக்கலாம்.

2. Facebook Integration – இந்த மென்பொருளில் Facebook இனை இணைத்ததன் மூலம் எண்ணற்ற பேஸ்புக் பயனர்களிடம் ஸ்கைப் இல்லாமலே அவர்களுக்குள் இலவசமாக வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் உங்கள் Facebook கணக்கில் சென்று உங்கள் நண்பர்களூடன் பேசலாம். பேஸ்புக்கில் இங்கிருந்தே உங்கள் Status ஐ அப்டேட் செய்யலாம். உங்கள் நண்பர்களின் தகவல்/செய்திகளை இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம்

3. Group Screen Sharing – ஒரே நேரத்தில் பலர் குழுவாக Conference Call செய்யும் போது உங்கள் டெஸ்க்டாப்பையோ அல்லது ஒரு மென்பொருளையோ நண்பர்களும் பார்க்கும் படி செய்யலாம். இந்த வசதி பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

4. Custom Chat and Sms – இந்த மென்பொருளிலேயே சாதாரண Chatting வசதியும் இருக்கிறது. மேலும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளையும் அனுப்பிக் கொள்ளலாம்.

5. Skype to Skype பேசுவதற்கு இலவசமாகவும் மற்ற தொலைபேசிகளுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

தரவிறக்கச்சுட்டி: http://www.skype.com/intl/en-us/get-skype/
(இங்கேயே லினக்ஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன் பதிப்புகளும் இருக்கிறது)

Skype மென்பொருளினை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்த

ஸ்கைப் மென்பொருளை முழுவதும் தமிழிலேயே பயன்படுத்திக் கொள்ள Language Translation Pack ஒன்றினை தமிழர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். கீழிருக்கும் சுட்டியில் சென்று அதனைத் தரவிறக்கவும்.
http://www.mediafire.com/?t4dgwe55mhjy3no

பின்னர் ஸ்கைப் மென்பொருளில் சென்று Tools -> Change Language என்ற மெனுவில் செல்லவும். அதில் கடைசியாக இருக்கும் Load Language File என்பதைக் கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கிய மொழிக்கோப்பினை தேர்வு செய்தால் போதும். உடனடியாக ஸ்கைப் மென்பொருள் முழுவதும் தமிழில் மாறிவிடும்.

இதனை உருவாக்கியவர் ராமச்சந்திரன் ராஜ்காந்த். இலங்கையில் வசிக்கும் இவர் விவசாயத்துறையில் பணிபுரிகிறார். இவர் ஓப்பன் ஆபிஸ் அபிவேர்ட் தமிழாக்கத்திலும் பங்களிப்பு செய்துள்ளார். உங்களுக்கு நேரமிருப்பின் அவருக்கு ஒரு பாராட்டைத் தெரிவியுங்கள்.
http://www.facebook.com/raajkanth
http://eezhathamilan.blogspot.com/

Saturday, February 4, 2012

சில பைல் டைப்புகளும் அதன் பயன்களும் !

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு


கம்ப்யூட்டரில் எத்தனையோ வகையான பைல் டைப்புகள் வந்துவிட்டது இனியும் வர இருக்கிறது. இருந்தாலும் புதிதாக கம்ப்யூட்டரை பயன்படுத்தும் நீங்கள் முக்கியமான சில பைல் டைப்புகளைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

எனவே அதனைப்பற்றி சிறு விளக்கம்:

எந்த ஒரு கம்ப்யூட்டர் பைலாக இருந்தாலும் அதன் பெயர் முடிவில் ஒரு புள்ளிக்கு பிறகு (.) மூன்று எழுத்தில் ஒரு வார்த்தை இருக்கும். இந்த வார்த்தைதான் அந்த பைல் எந்த டைப் பைல் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. உதாரணத்திற்க்கு book1.doc என்று ஒரு பைல் இருந்தால் இது Microsoft Office Document பைல் என தெரிந்துகொள்ளலாம்.

ஒரு புள்ளி அதன் பிறகு மூன்று எழுத்தில் ஒரு வார்த்தையை நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் எந்த ஒரு பைலிலும் பார்க்கவில்லை என்றால் அதை எப்படி எல்லா பைல்களுக்கும் கொண்டுவருவது.

உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு போல்டரை நீங்கள் ஓப்பன் செய்யுங்கள் அதில் Tools என்ற தலைப்பை கிளிக் செய்து Folder Option என்ற பகுதியை தொட்ட உடனே உங்களுக்கு கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பகுதி திறந்துகொள்ளும்.



இதில் Folder Option என்ற் தலைப்பிற்க்கு கீழே General என்பதற்க்கு அடுத்து உள்ள View என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். அதில் hide extensions for known file type என்ற இடத்தில் உள்ள டிக்கை எடுத்துவிட்டு OK என்ற பட்டனை அழுத்துங்கள். அதன் பிறகு உங்கள் பைல்களை பாருங்கள் அதன் பெயருக்கு பிறகு .doc என்பதுபோன்ற மூன்று எழுத்து இருக்கும்.

சரி இனி சில முக்கிய பைல் டைப்புகளை பற்றி இங்கு பார்ப்போம்

.doc (Microsoft Office 2003) இது ஒரு மைக்ரோ சாப்ட் ஆபீஸ் 2003 பைல்
.docx (Microsoft Office 2007)இது ஒரு மைக்ரோ சாப்ட் ஆபீஸ் 2007 பைல்
.xls (Microsoft Excel) இது ஒரு மைக்ரோ சாப்ட் எக்ஸெல் 2003 பைல்
.xlsx (Microsoft Excel) இது ஒரு மைக்ரோ சாப்ட் எக்ஸெல் 2007 பைல்
.ppt (Microsoft Power Point) இது ஒரு மைக்ரோ சாப்ட் பவர் பாய்ண்ட் 2003 பைல்
.pptx (Microsoft Power Point) இது ஒரு மைக்ரோ சாப்ட் பவர் பாய்ண்ட் 2007 பைல்

.pdf (Adobe Acrobat Document) இது ஒரு அடோப் பி.டி.எப் பைல்
.txt (Text Document File) இது ஒரு டெக்ஸ்ட் டாக்குமெண்ட் பைல்

.jpg ( JPG File ) இது ஒரு இண்டெர் நெட் போட்டோ பைல்
.jpeg ( JPEG File ) இது ஒரு இண்டெர்நெட் போட்டோ பைல்
.gif (GIF File) இது ஒரு அனிமேசன் போட்டோ பைல்
.bmp (Bitmap Image File) இது ஒரு பெயிண்ட் பிரஸ் போட்டோ பைல்

.mov (Movie File ) இது ஒரு கம்ப்யூட்டர் வீடியோ பைல்
.wmv ( Window Media Video File) இது ஒரு கம்ப்யூட்டர் வீடியோ பைல்
.avi (Audio Video Interleave File ) இது ஒரு கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ பிளையர்களில் பயன்படுத்தும் வீடியோ பைல்
.VOB ( VOB -DVD file ) இது ஒரு DVD வீடியோ பைல்
.3gp ( 3GP File) இது மொபைல்களில் பயன்படுத்தும் பைல்
.mp4 (MP4 File ) இது மோபைல் மற்றும் சிறிய பிளையர்களில் பயன்படுத்தும் பைல்
.mpeg (MPEG File) இது கம்ப்யூட்டர் மற்றும் பிளேயர்களில் பயன்படுத்தும் பைல்
.divx (DivX File) இது புதிய வகை Divix DVD பைல்

.mp3 (MP3 File) இது கம்ப்யூட்டர் மற்றும் பிளேயரில் பயன்படுத்தும் ஆடியோ பைல்
.wav (WAV File ) இது கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆடியோ பைல்
.wma (Window Media Audio) இது கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆடியோ பைல்
.amr (AMR File) இது மொபைலில் மட்டும் பயன்படுத்தும் ஆடியோ பைல்


இன்னும் பல எத்தனையோ டைப் பைல்கள் இருக்கின்றன.............

உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய விபரங்களை குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்...




நீங்கள் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கிவிட்டீர்களா ! இதுக்கு உங்கள் பதில் ஆம் என்றால்... இனி உங்கள் கம்ப்யூட்டரை பாதுக்காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

இதுவரை நீங்கள் எப்படி இருந்தாலும் சரி இனி உங்கள் கம்ப்யூட்டர் விசயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு விலை அதிகம் கொடுத்து வாங்கிய உங்கள் கம்ப்யூட்டரின் முக்கியமான ஹார்டுவேர் பாகங்களை இன்னொருவர் உங்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது அதனை சரி செய்ய கடை காரரிடம் கொடுப்பதற்க்கு முன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுவேரை பற்றிய குறிப்புகளை நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் கம்ப்யூட்டர் சரி செய்து வந்த பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு உள்ளே உள்ள ஹார்டுவேர்கள் ( Mother Board, Processor, Ram, Hard Disk)அனைத்தும் முன்பு இருந்தவைதான் இப்பொழுதும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்.


அது எப்படி என்று கேட்க்கிறீர்களா ?

அது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. இங்கு கீழே சொன்ன முறைப்படி இப்பொழுதே உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய குறிப்புகளை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் மற்றும் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள

Start > Run என்ற பட்டனை அழுத்தி msinfo32.exe என்று டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.
























































அடுத்து Run பட்டனை கிளிக் செய்து இங்கு சொன்ன எழுத்துக்களை டைப் செய்யுங்கள்.












Run ல் மேலே சொன்ன எழுத்துக்களை டைப் செய்து எண்டரை அழுத்தியதும் இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதிலும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் இருக்கும்.

இந்த System டிஸ்பிளேயில் நீங்கள் முக்கியமான உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள
Processor Type மற்றும் Ram -ன் அளவை தெரிந்துகொள்ளலாம்.




























அடுத்ததாக இதே தட்டில் தலைப்பில் Display என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். இதில் முக்கியமாக உங்கள் மதர்போர்டின் மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கம்ப்யூட்டரில் மதர்போர்டு என்பது மிக முக்கியமான பகுதி. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விலை அதிகமான தரம் மிக்க உங்கள் மதர்போர்டை உங்களுக்கு தெரியாமல் ஒருவர் மாற்றிவிட்டு தரம் குறைந்த ஒரு போர்டை வைத்து உங்களிடம் தந்துவிடமுடியும். அதன் வித்தியாசம் உங்களுக்கு உடனே தெரியாது. அதனால் இந்த மாடல் நம்பரை வைத்துதான் நீங்கள் உங்கள் மதர்போர்டு சரியாகத்தான் உள்ளதா என தெரிந்துகொள்ள முடியும்.



























அடுத்ததாக உங்கள் ஹார்டிஸ்க்.

உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு 320 GB, 250 GB, 160 GB, 100 GB, 80 GB, 40 GB, 20GB என்று பல அளவுகளில் இருக்கலாம் எதுவாக இருந்தாலும் சரி அதன் அளவு என்ன என்பதை பார்த்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதனை தெரிந்துகொள்ள உங்கள் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் உள்ள My Computer என்ற ஐக்கானை செலெக்ட் செய்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து கடைசியாக உள்ள Properties என்ற இடத்தை தொடுங்கள்












உடனே உங்களுக்கு கீழ் காணும் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு என்ன என்பதை பார்த்து குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளலாம்.


























இங்கு மேலே உள்ள படத்தில் C டிரைவின் ஹார்டிஸ்கின் அளவு மட்டும் கிட்டத்தட்ட 50 GB என்று தெரியப்படுத்துகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் இன்னொறு டிரைவ் D என்ற பெயரிலும் இருக்கலாம் அதன் அளவு 30 GB என இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் கம்யூட்டரில் உள்ள மொத்த ஹார்டிஸ்கின் அளவு 80 GB என நீங்கள் கணக்கெடுத்துக்கொள்ளலாம்.

இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் உங்கள் Mother Board Model No, Manufactur Name, Processor Type, Ram Capacity, Hard Disk Capacity போன்ற விபரங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களை எவரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியாது.

உங்கள் கம்ப்யூட்டர் Hard Disk ன் RPM வேகம் என்ன என்பதை தெரிந்துகொள்வது எப்படி ?







உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk ன் RPM Speed என்ன என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதை இந்த பாடத்தில் நாம் பார்ப்போம்.....

Hard Disk ல் 4200 RPM, 5200 RPM மற்றும் 7200 RPM என பல வகை உள்ளது.

இதில் 4200 மற்றும் 5200 RPM பழைய கம்ப்யூட்டர் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.  7200 RPM இப்பொழுது தயாரிக்கப்படும் புதிய வகை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது.

சரி இந்த RPM என்றால் என்ன ?

Revolutions per minute

ஒரு நிமிடத்தில் ஏற்படும் சுழற்ச்சி....

அதாவது Clock வடிவத்தில் இந்த ஹார் டிஸ்க் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுற்றுகிறது என்பதை கணக்கிடுவதை தான் RPM என குறிப்பிடுகிறார்கள்.

5200 RPM என்றால் ஒரு நிமிடத்தில் இது 5200 முறை சுழன்றுகொண்டிருக்கிறது.

7200 RPM என்றால் ஒரு நிமிடத்தில் இது 7200 முறை சுழன்றுகொண்டிருக்கிறது என அர்த்தம்.

ஆனால் நீங்கள் 5200 RPM Hard Disk ன் மூலம் Data Transfer செய்யும்பொழுது இது ஒரு நிமிடத்திற்கு 10000 முறை சுழல்கிறது.

அதுபோல 7200 RPM Hard Disk ன் மூலம் நீங்கள் Data Transfer செய்யும்பொழுது இது ஒரு நிமிடத்திற்கு 15000 முறை சுழல்கிறது.

( அதாவது சாதாரணமாக இயங்கும் வேகத்தை விட Data Transfer வேகம் இரு மடங்காக மாறுகிறது)

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk ன் வேகம் 5200 RPM அல்லது 7200 RPM என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?
 

உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk ன் வேகம் என்ன என்பதை உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் மாடல் நம்பரை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

முதலில் உங்கள் ஹார் டிஸ்க்கின் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள

Desktop ல் உள்ள My Computer ஐ மவுசால் செலெக்ட் செய்து வலது பக்கம் கிளிக் செய்து Properties செல்லுங்கள். அதில் Hardware தலைப்பை கிளிக் செய்யுங்கள். அதில் Device Manager பட்டனை கிளிக் செய்யுங்கள்.

2012-02-02_103718.jpg



Device Manager ல் Disk Drive என்பதில் இடது பக்கம் உள்ள + ஐ கிளிக் செய்தால் உங்கள் HardDisk ன் மாடல் நம்பர் என்ன என்பதை நிங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மாடல் நம்பரை வைத்து நாம் எப்படி RPM ஐ கண்டு பிடிப்படி ?

என்னுடைய Hard Disk மாடல் நம்பர்
WD3200AAKS

இதில்

WD - என்பது ஹார்டிஸ்க் ப்ராண்ட்
320 - என்பது அதன் அளவு (Capacity)

0AAKS - என்பது WD பிராண்டை பொருத்தவரை 16 MB Cache Power என்பதை குறிப்பிடுகிறது.

இதற்கு பதிலாக

0AVVS - என இருந்தால் 8 MB Cache Power என அர்த்தம்.

WD Hard Disk List ல் இந்த மாடல் நம்பர் 7200 RPM Speed என குறிப்பிடப்படுகிறது.

WD3200AAKS


எனவே இந்த மாடல் நம்பரை நாம் இண்டெர் நெட்டில் Google Search ல் டைப் செய்து RPM என்ன என்பதை டைப் செய்து தேடினால் இதன் RPM நமக்கு தெரிந்துவிடும்.

What is the RPM for model No. WD3200AAKS ?

என Google Search ல் நான் டைப் செய்ததும் எனக்கு கிடைத்த ரிசல்ட் இது.

2012-02-02_143730.jpg








இதுபோல நீங்களும் உங்கள் Hard Disk இன் மாடல் நம்பரை கொடுத்து கூகிள் மூலமாக அதன் RPM என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.



பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து சாதனை

 

 

 



சமூக தளங்களில் முதல் நிலையில் இருக்கும் இணையதளம் பேஸ்புக். தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது பேஸ்புக். இந்தியர்களிடையே பேஸ்புக் தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.



Forbes தளத்தின் தகவல் படி 6வது இடத்தில் இருந்து ஒரே வருடத்தில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.
பிப்ரவரி 2012 கணக்கெடுப்பின் படி இந்தோனேசிய பயனர்களின் எண்ணிக்கை 43,060,360 இந்தியா பயனர்களின் எண்ணிக்கை 43,497,980 பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் UKவிடம் இருந்து இரண்டாவது இடத்தை தட்டி பறித்தது இந்தோனேசியா. ஆனால் மூன்றே மாதத்தில் இழந்தது.
தற்போதைய நிலவரப்படி பேஸ்புக் உபயோகத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும் வெற்றி நடை போடுகின்றன.

Friday, February 3, 2012

சமூக வலைத்தளப் போட்டியும் கூகிளின் புதிய தேடல் உத்திகளும்


இணைய உலகில் தற்போது சமூக வலைத்தளங்கள் இடையான போட்டியில் கூகிளின் பிளஸ்க்கும் பேஸ்புக் தளத்திற்குமே பலத்த போட்டியாக இருக்கிறது. கூகிளை விட பேஸ்புக் இமாலய கூட்டத்தை வைத்திருப்பதால் எவ்வாறு முந்தலாம் என்று காய் நகர்த்தி வருகிறது. பேஸ்புக்கில் எதாவது ஒரு வசதி தந்தால் கூகிளும் அதனை ஏற்படுத்துகிறது. பேஸ்புக் நிறுவனமும் இதற்கு சளைத்தவாறில்லை. அண்மையில் கூகிள் தனது தேடியந்திரத்தின் தேடல் உத்திகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. Google Personal Search (Search Plus your World) என்று அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இந்த புதிய வசதியினால் தேடல் சேவையானது கூகிள்+ தளத்தின் தரவுகளோடு (Data) இணைக்கப் பட்டிருக்கிறது. இதன் நன்மைகள், சமூக வலைத்தளப் பிரச்சினைகள் பற்றியும் பார்ப்போம்.

Personal Search என்றால் என்ன?

கூகிள் தேடியந்திரத்தில் இதற்கு முன் நீங்கள் தேடும் போது இணையத்தில் கிடைப்பவை மற்றும் உங்கள் நண்பர்களால் +1 செய்யப்பட்ட பக்கங்களிலிருந்து மட்டுமே முடிவுகளைக் காட்டும். இதனை மேலும் விரிவுபடுத்தி நீங்கள் கூகிள் பிளஸ் தளத்தில் போட்ட செய்திகள், புகைப்படங்கள், உங்கள் நண்பர்களால் பகிரப்பட்ட தளங்கள் மற்றும் தகவல்களிலிருந்தும் திரட்டி உங்கள் தேடலுக்குப் பொருத்தமான முடிவுகளை பரிந்துரை செய்யும். இதில் நாம் Private ஆகவும் வெளியிடுகிற பகிர்வுகள் கூகிள் தேடலில் இடம்பெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இது கூகிளின் google.com முகவரியில் மட்டும் பரிசோதனையில் வந்திருக்கிறது. விரைவில் கூகிள் இதனை பொதுவாக அறிமுகப்படுத்தும்.

இதில் இணைக்கப்பட்டுள்ள வசதிகள்:

1. Profiles, Pages and Peoples in Search

கூகிள் பிளசில் இணைந்திருப்பவர்கள் பெயர்கள் மற்றும் பக்கங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு விடும். கூகிளில் தேடும் போது தேடல் பெட்டியில் எதாவது ஒரு எழுத்தை அடிக்கும் போதே பொருத்தமான புரோபைல்கள் Auto Suggestion முறையில் தேடல் பெட்டிக்குக் கீழே தோன்றும். இந்த இடத்தில் இருந்தபடியே அவர்களின் புரோபைலில் நண்பராகவோ அல்லது பக்கத்திற்கு Follower ஆக Add to Circle என்பதைக் கொடுத்து இணைத்துக் கொள்ளலாம்.

2.Suggested Results from Google+ Users

கூகிள் பிளசில் நமக்கு ஒருவரை நண்பராகச் சேர்த்துக் கொள்ளுமாறு கூகிள் பிளஸில் இணைந்திருக்கும் சிலரை Suggested List ஆக வலப்புறம் காட்டும். தேடும் போது நமது பகிர்வுகள், நண்பர்கள் பகிர்ந்த தளங்களில் மட்டுமின்றி இந்த Suggested List இல் உள்ளவர்களின் பகிர்தலையும் தேடலில் காட்டும். இதன்படி அதிகம் பேர் இணைந்திருக்கும் கூகிள் பிளஸ் புரோபைலுக்கு தேடலில் முக்கியத்துவம் கிடைக்கலாம். இதற்கு வலைத்தளம் வைத்திருப்பவர்கள் கூகிள்+ Badge வைத்துக் கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களின் போட்டி :

கூகிள் பிளஸ் + கூகிள் தேடல் இரண்டையும் இணைத்தது சிலருக்கு வசதியாக இருந்தாலும் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சிலர் இதனை தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். கூகிளின் இந்த செயல்பாட்டால் டுவிட்டர் அதிர்ச்சியடைந்து கோபமாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ஏனெனில் இனி மேல் கூகிள் தேடலில் கூகிள் பிளஸில் இருக்கும் புரொபைல்கள் மற்றும் பக்கங்களே அதிக முக்கியத்துவம் பெறும். இப்போது வரை குறிப்பிட்ட நபரைத் தேடும் போது அவரின் டுவிட்டர் முகவரியும் பேஸ்புக் முகவரியோ பக்கமோ கூகிளில் பட்டியலிடப்படும். கூகிள் இதனை மெல்ல மெல்லக் குறைத்து விடுமே. இதனால் டுவிட்டர், பேஸ்புக்குக்கு கூகிள் தேடலினால் வரும் கூட்டம் குறைந்து விடுமல்லவா? எப்படியோ தொலைந்து போனால் நன்றாக இருக்குமல்லவா?

பேஸ்புக்கில் தான் கருத்துகளும் செய்திகளும் அதிகமாக பகிரப்படுகின்றன. அவை வெளியுலகத்துக்கு வராமல் பேஸ்புக்கினுள்ளேயே முடங்கிப் போய்விடும். தற்போது கூகிளுக்கு பேஸ்புக் அளவுக்கு பயனர்களும் இல்லை. கூகிள் பிளஸ் தளம் இன்னும் முழுமையடையாவிட்டாலும் மற்ற தளங்களை இப்படி ஒரங்கட்டுவதன் மூலம் சமூக வலைத்தளங்களின் இடையிலான போட்டியில் அழுத்தமாக காலூன்ற முயற்சிக்கிறது கூகிள்.

பேஸ்புக்கும் ஒரு தேடியந்திரம் ஆரம்பிச்சா எப்படியிருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

Thursday, February 2, 2012

14 வருடங்களுக்கான கூகுளின் அனைத்து லோகோவையும் ஒரே இடத்தில் காண



14 வருடங்களுக்கான கூகுளின் அனைத்து லோகோவையும் ஒரே இடத்தில் காண

கூகுள் என்று சொன்னாலே அனைவருக்கும் தெரிந்து விடும் நாம் ஏதோ இணையத்தை பற்றி பேச போகிறோம் என்று அந்த அளவிற்கு உலகில் பெரும்பாலானவர்களால் உபயோக படுத்தப்படும் தேடியந்திரமாகும். இந்த தளம் 1996 ஆம் ஆண்டு Stanford பல்கலைகழக மாணவர்களான Larry Page மற்றும் Sergey Brin ஆகிய இருவர்களால் "Back Rub" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தேடியந்திரமாகும். பின்பு 1998 ஆம் ஆண்டு இதனை Google என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு இன்று இந்த இமாலய இலக்கை அடைந்துள்ள நிறுவனமாகும். இந்த கூகுள் தேடியந்திரம் தன் லோகோவை அமைப்பதில் மிகவும் கவனம் செலுத்துகிறது.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது விசேஷங்கள், முக்கிய நிகழ்வுகள், அறிஞர்களின் சாதனைகள் வரும் நாட்களில் ஏற்ப தனது லோகவை அந்த நிகழ்விற்கு ஏற்றமாதிரி வடிவமைக்கிறது. இந்த லோகோக்கள் Doodles என்று அழைக்க படுகிறது. 


முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி Burning Man Festival என்ற விழாவுக்காக உலகம் முழுவதும் தன் லோகோவை மாற்றியது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளுக்கும் தன் லோகவை மாற்றி அனைவரிடமும் அந்த செய்தியை எளிதாக சேர்க்கிறது. இது வரை சுமார் 700 வைகயான லோகோக்களை பகிர்ந்துள்ளது. இதில் அதிக பட்சமாக அமெரிக்காவில் 300 லோகோக்களை பகிர்ந்துள்ளது.

  • கூகுளில் 1998ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தன்னுடைய லோகோவை அனைவரும் காணும் வசதியை கொடுத்துள்ளது. 
  • இந்த தளம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் அறியாதவர்கள் இந்த லிங்கில் க்ளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.
  • இதில் நான் குறிப்பிட்டுள்ள இடத்தில் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டு வரையில் கொடுக்க பட்டிருக்கும். அதில் உங்களுக்கு வருடத்தை க்ளிக் செய்து லோகோவை பார்த்து கொள்ளுங்கள்.

  • இது போன்று சுமார் 14 வருடங்களுக்கான லோகோக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். 
  • மேலும் இந்த தளத்தில் நமக்கு பிடித்த லோகோவுக்கு ஓட்டு போடும் வசதியும் உள்ளது .

கணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்!

கணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்!


கணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே பயம் வைரஸ் தான். வைரஸ்
எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. சிலரின்
கணினிகளில் வைரஸ் தாக்கிய விசயமே தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பர்.
வைரஸ்களின் நோக்கமே உங்கள் கணினியை செயல் இழக்க வைத்து பாழ்படுத்துவதே.
வைரஸ்கள் வந்த பின்னர் கணினியை திரும்ப நல்ல நிலைக்கு மீட்பதை விட
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது தான் நலம். கணினியை பாதுகாப்பாக
வைக்க என்ன வழிகள் என்று பார்ப்போம்.

கீழ்வரும் மூன்று மென்பொருள்களின் உதவியோடு கணினியை மிக்க பாதுகாப்போடு

வைத்திருக்க முடியும். இந்த மூன்று மென்பொருள்களும் இருப்பின் உங்கள்
கணினியில் வைரஸ்க்கு நோ சொல்லலாம்.

1 . Avast Antivirus


முதலில் கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் கண்டிப்பாய் இருந்தாக

வேண்டும்.சில வருடங்களாய் பல ஆண்டிவைரஸ் மென்பொருள்களை சோதனைக்கு
உட்படுத்தியிருக்கிறேன். Avast,Avira, AVG, Nod32, Escan, Comodo, K7,
Kaspersky போன்றவற்றை பணிச்சூழலில் பயன்படுத்திருக்கிறேன். இவற்றில் சில
கட்டண மென்பொருள்களும் சில இலவசமும் இருக்கின்றன.

எவருமே இலவசம் என்றால் தான் விரும்புவார்கள். இலவசமாக தரப்படுவதில் Avast

ன் பயனர் இடைமுகமும் பாதுகாப்பும் சிறப்பாக உள்ளது. இப்போது இதன் புதிய
பதிப்பாக 6 வெளிவந்துள்ளது. இதன் வைரஸ்களை கையாளும் விதம் மற்ற இலவச
மென்பொருள்களான Avira, AVG போன்றவற்றை விட நன்றாக உள்ளது. பென் டிரைவை
போட்டவுடன் வைரஸ் இருப்பின் பிடித்து அழித்துவிடுகிறது.


எந்த போல்டருக்கும் ட்ரைவுக்கும் சென்றாலும் தானாக ஒருமுறை சோதித்து

கண்டுபிடிக்கிறது. இதில் Mail shield, web shield, Network shield இன்ன
பிற பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.இதனை பயன்படுத்துவதும் எளிமையான விஷயம்
தான். ஒருமுறை ஆன்லைனில் பதிவு செய்துவிட்டால் ஒரு வருடத்திற்கு இலவசமாக
பயன்படுத்தலாம். ஒரு வருடம் முடிந்த பின்னர் திரும்ப இலவசமாக பதிவு
செய்திடலாம்.
தரவிறக்கச்சுட்டி : http://www.avast.com/free-antivirus-download
பதிவு செய்ய : http://www.avast.com/registration-free-antivirus.php

கட்டண மென்பொருள்களில் கண்டிப்பாக Kaspersky தான். இதன் செயல்பாடும்

சிறப்பாக உள்ளது. ஒரு வருடத்திற்கான தனிநபர் பயன்பாட்டுக்கு 450
ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இல்லை காசில்லாமல் வேண்டும் என்றால் இதன்
கிராக் மென்பொருளை இணையத்தில் தேடி பயன்படுத்தலாம்.

2 . USB Disk Sequrity


வைரஸ்கள் பெரும்பாலும் நுழைவதே பென் டிரைவ் , மெமரி கார்டுகள்

போன்றவற்றால் தான். இவற்றை கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு கணினியும்
பாதுகாப்பாக இருக்கும். பென் ட்ரைவைப் போட்டவுடன் தானாக ஸ்கேன் செய்து
பெரும்பாலான வைரஸ்களை இந்த மென்பொருளின் மூலம் நீக்கிவிடலாம்.

autorun.inf, Newfolder.exe போன்ற பல வைரஸ்களை இதன் மூலம் எளிதாக

நீக்கிவிடலாம். இதனால் உங்கள் கணினிக்கு வைரஸ்கள் பரவும் வாய்ப்பு
குறைகிறது.

தரவிறக்கச்சுட்டி :

http://www.4shared.com/file/2vIMS1st/USB-Disk-Security53020-latest-.html

(இந்த கோப்பிற்கு உள்ளேயே பதிவு செய்வதற்கான பெயரும் லைசென்ஸ் எண்ணும்
உள்ளது)

3. WinPatrol


இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள இயல்பான அமைப்புகளை சோதித்து

சேமித்துக் கொள்கிறது. பின்னர் கணினியில் எதாவது வைரஸ்கள்,
இணையத்திலிருந்து வருகிற மால்வேர்கள் எதாவது மாற்றங்களை உங்களுக்கு
தெரியாமல் ஏற்படுத்துகிற போது தடுத்து நிறுத்தி உங்களுக்கு
தெரியப்படுத்துகிறது.

பொதுவாக வைரஸ்கள், மால்வேர்கள் கணினியின் Startup, Registry, Scheduled

Tasks, Services போன்ற பகுதிகளில் நுழைந்து தங்களது இயக்கத்தை
பரப்புகின்றன. இந்த பகுதிகளில் எந்த மாற்றங்களை செய்தாலும் அதனை உடனடியாக
உங்களிடம் தெரிவிக்கின்றன.


மேலும் இதன் மூலம் தற்போது இயங்கும் மென்பொருள்கள், சமிபத்திய கோப்புகள்,

Cookies, services, Scheduled tasks, startup, Hidden files போன்ற
விசயங்களை தெளிவாக அறிய முடியும். இது சிறப்பாக செயல்படும் இலவச
மென்பொருளாகும். இதன் மூலம் உங்கள் கணினியை 100 சதவீதம் பாதுகாப்பாக
வைக்க முடியும்.

தரவிறக்கச்சுட்டி :
http://www.winpatrol.com/download.html

இந்த மூன்று மென்பொருள்களையும் கணினியில் நிறுவிவிட்டு ஹாயாக வேலை

செய்யுங்கள். உங்கள் கணினியில் வைரஸ்க்கு 'நோ' சொல்லுங்கள்!


உலகின் விலை உயர்ந்த கை கடிகாரங்கள்:

உலகின் விலை உயர்ந்த கை கடிகாரங்கள்


 இன்றைய பதிவில் "உலகின் விலை உயர்ந்த கை கடிகாரங்களை" பார்ப்போம். கை கடிகாரங்களின் Brand, Model மற்றும் விலையும் கொடுக்க பட்டுள்ளது.  ஆர்டர் கொடுக்க ரெடியா இருங்க. 
































More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget