/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, February 6, 2012

வே2 எஸ்.எம்.எஸ். (Way2Sms) விரிவாக்கம்
இலவசமாக இரு நண்பர்களுக்கிடையே எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்ப உதவிடும் தளமான "வே 2 எஸ்.எம்.எஸ்.' (Way2Sms.com) அண்மையில் இதே போல இயங்கும் "160 பை 2 டாட் காம் (160by2.com)’ என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது.

Way2online என்ற நிறுவனம் இதனை இயக்கி வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதன்வாடிக்கையாளர் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சமாக உயர இருக்கிறது. அத்துடன் இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 35% பேர் இந்த தளத்தில்பதிந்தவர்களாக இருப்பார்கள்.

தற்போது இந்நிறுவனத்திடம் 2.3 கோடி பேர்கள் பதிந்த வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதுவரை இந்த இரு தளங்களும் மாதந்தோறும் பத்து லட்சம் என்ற அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வந்தன. இதன் மூலம் இனி வே 2 எஸ்.எம்.எஸ். நிறுவனம், இந்தியாவின் முன்னணி இன்டர்நெட் நிறுவனமாக இடம் பெறும்.

வே 2 எஸ்.எம்.எஸ். 2006 ஆம் ஆண்டில் வன பாலா என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் டெக்ஸ்ட் மெசேஜிங், சேட், இமெயில் மற்றும் சோஷியல் மீடியா செய்திகளை இலவசமாகப் பரிமாறிக் கொள்ளலாம். இந்தியாவில் இயங்கும் சி.டி.எம்.ஏ மற்றும் ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்திகளை இந்த தளம் மூலம் அனுப்பலாம். செய்தி ஒன்றில் 160 கேரக்டர்கள் மட்டுமே இருக்க முடியும்.

அத்துடன் ஜிசேட், யாஹூ, பேஸ்புக் தளங்களில் மேற்கொள்வது போல ஒருவருக்கொருவர் டெக்ஸ்ட் வழி சேட் செய்திடமுடியும். உலகில் அதிகம் பயன்படுத்தும் இணைய தள வரிசையில், இது சென்ற மாதம் 509 ஆவது இடத்தையும், இந்தியாவில் 34 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது.


இந்த தளத்திற்கு ஏறத்தாழ 30 நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஏழு லட்சம் புதிய பயனாளர்கள் பதிந்து கொண்டு வருகின்றனர். சென்ற ஆண்டில் கூகுள் தேடல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட தளங்களில் முதல் பத்து இடத்தில் வே 2 எஸ்.எம்.எஸ். இடம் பெற்றிருந்தது.

160by2.com நிறுவனம் 2003ல் இதே போல் தொடங்கப்பட்டது. ஹைதராபாத்தில் தலைமை அலுவலகம் இருந்தாலும், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் இதற்கு கிளை அலுவலகங்கள் இயங்குகின்றன

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget