Personal Search என்றால் என்ன?
கூகிள் தேடியந்திரத்தில் இதற்கு முன் நீங்கள் தேடும் போது இணையத்தில் கிடைப்பவை மற்றும் உங்கள் நண்பர்களால் +1 செய்யப்பட்ட பக்கங்களிலிருந்து மட்டுமே முடிவுகளைக் காட்டும். இதனை மேலும் விரிவுபடுத்தி நீங்கள் கூகிள் பிளஸ் தளத்தில் போட்ட செய்திகள், புகைப்படங்கள், உங்கள் நண்பர்களால் பகிரப்பட்ட தளங்கள் மற்றும் தகவல்களிலிருந்தும் திரட்டி உங்கள் தேடலுக்குப் பொருத்தமான முடிவுகளை பரிந்துரை செய்யும். இதில் நாம் Private ஆகவும் வெளியிடுகிற பகிர்வுகள் கூகிள் தேடலில் இடம்பெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இது கூகிளின் google.com முகவரியில் மட்டும் பரிசோதனையில் வந்திருக்கிறது. விரைவில் கூகிள் இதனை பொதுவாக அறிமுகப்படுத்தும்.
இதில் இணைக்கப்பட்டுள்ள வசதிகள்:
1. Profiles, Pages and Peoples in Search
2.Suggested Results from Google+ Users
கூகிள் பிளசில் நமக்கு ஒருவரை நண்பராகச் சேர்த்துக் கொள்ளுமாறு கூகிள் பிளஸில் இணைந்திருக்கும் சிலரை Suggested List ஆக வலப்புறம் காட்டும். தேடும் போது நமது பகிர்வுகள், நண்பர்கள் பகிர்ந்த தளங்களில் மட்டுமின்றி இந்த Suggested List இல் உள்ளவர்களின் பகிர்தலையும் தேடலில் காட்டும். இதன்படி அதிகம் பேர் இணைந்திருக்கும் கூகிள் பிளஸ் புரோபைலுக்கு தேடலில் முக்கியத்துவம் கிடைக்கலாம். இதற்கு வலைத்தளம் வைத்திருப்பவர்கள் கூகிள்+ Badge வைத்துக் கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களின் போட்டி :
கூகிள் பிளஸ் + கூகிள் தேடல் இரண்டையும் இணைத்தது சிலருக்கு வசதியாக இருந்தாலும் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சிலர் இதனை தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். கூகிளின் இந்த செயல்பாட்டால் டுவிட்டர் அதிர்ச்சியடைந்து கோபமாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ஏனெனில் இனி மேல் கூகிள் தேடலில் கூகிள் பிளஸில் இருக்கும் புரொபைல்கள் மற்றும் பக்கங்களே அதிக முக்கியத்துவம் பெறும். இப்போது வரை குறிப்பிட்ட நபரைத் தேடும் போது அவரின் டுவிட்டர் முகவரியும் பேஸ்புக் முகவரியோ பக்கமோ கூகிளில் பட்டியலிடப்படும். கூகிள் இதனை மெல்ல மெல்லக் குறைத்து விடுமே. இதனால் டுவிட்டர், பேஸ்புக்குக்கு கூகிள் தேடலினால் வரும் கூட்டம் குறைந்து விடுமல்லவா? எப்படியோ தொலைந்து போனால் நன்றாக இருக்குமல்லவா?
பேஸ்புக்கில் தான் கருத்துகளும் செய்திகளும் அதிகமாக பகிரப்படுகின்றன. அவை வெளியுலகத்துக்கு வராமல் பேஸ்புக்கினுள்ளேயே முடங்கிப் போய்விடும். தற்போது கூகிளுக்கு பேஸ்புக் அளவுக்கு பயனர்களும் இல்லை. கூகிள் பிளஸ் தளம் இன்னும் முழுமையடையாவிட்டாலும் மற்ற தளங்களை இப்படி ஒரங்கட்டுவதன் மூலம் சமூக வலைத்தளங்களின் இடையிலான போட்டியில் அழுத்தமாக காலூன்ற முயற்சிக்கிறது கூகிள்.
பேஸ்புக்கும் ஒரு தேடியந்திரம் ஆரம்பிச்சா எப்படியிருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.
No comments:
Post a Comment