/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, January 5, 2013

வாரன்ட் இன்றி போலிஸ் எப்போது கைது செய்யலாம்?



வாரான்ட் என்கிற வார்த்தை நம் எல்லாருமே எப்போதோ ஒரு முறை உச்சரித்திருப்போம். " அந்த கேசில் அவர் மேலே வாரன்ட் குடுத்தாச்சாம். அரெஸ்ட் பண்ண போறாங்களாம்" என பேசி கொள்வோம்.

ஒரு நபரை வாரன்ட் இருந்தால் மட்டும் தான் அரஸ்ட் பண்ண முடியுமா? வாரன்ட் இல்லாமல் எப்போது அரஸ்ட் பண்ணலாம்; இப்பதிவின் மூலம் அறிவோம்.

 





முதலில் வாரன்ட் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் : 

கைதுக்கான வாரன்ட் (பிடிப்பாணை) 

வாரன்ட்: 

1. எழுதப்பட்டிருக்க வேண்டும்

2. நீதிமன்றத்தின் தலைமை அலுவலர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்

3. நீதிமன்றத்தின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்

4. குற்றவாளியின் பெயர், முகவரி, அவர் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன என்பதும் குறிப்பிட பட்டிருக்க வேண்டும்.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமலிருந்தால் கூட வாரன்ட் சரியான ஒன்றல்ல. அத்தகைய வாரன்ட் மூலம் செய்யப்படும் கைது சட்ட விரோதமாகும்.
வாரன்ட் (பிடிப்பாணை) இன்றி கைது  

ஒரு நபர் கைது செய்வதற்குரிய குற்றம் செய்ததாக சந்தேகம் இருந்தால் அவரை வாரன்ட் இன்றி கைது செய்ய காவல் துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. பிற குற்றங்களில் நீதிபதியிடமிருந்து வாரன்ட் பெறாமல் ஒரு நபரை கைது செய்ய முடியாது. 


Criminal Procedure Code-ல் எந்தெந்த குற்றங்கள் வாரன்ட் இன்றி கைது செய்ய முடியும், எவை வாரன்ட் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும் என்ற விபரங்கள் உள்ளன.

கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி திருட்டு போன்ற குற்றங்கள் வாரன்ட் இன்றி கைது செய்ய கூடிய குற்றங்களாகும்.

வாரன்ட் இன்றி ஒரு நபரை எப்போது கைது செய்யலாம்:

1. அவர் நேரடியே வாரன்ட் இன்றி கைது செய்ய கூடிய அளவு குற்றம் புரிகிறார் அல்லது அதில் சம்பந்த பட்டுள்ளார் என்கிற சந்தேகம் இருந்தால்

2. வீட்டை உடைப்பதற்கான (House breaking) சாதனங்கள் வைத்திருந்தால்

3. களவு போன பொருட்களை வைத்திருந்தால்

4. அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக (Declared offenders) இருந்தால்

5. பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரியை தடுத்தால்

6. சட்ட பூர்வ காவலில் இருந்து தப்பி ஓடினால்

7. ராணுவன், கடற்படை, விமானபடையிலிருந்து பணியை விட்டு ஓடி வந்தவராக இருந்தால்

8. விடுவிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறியிருந்தால்

9. கைது செய்யகூடிய குற்றம் புரிய அவர் சில வேலைகளை தயார் செய்கிறார் என சந்தேகம் இருந்தால்

10. வாடிக்கையான குற்றவாளியாக இருந்தால் ( Habitual Offender)

11. வாரன்ட் இல்லாமல் கைது செய்ய முடியாத சிறிய குற்றம் ஒன்றை புரிந்தவர் - காவல் துறை அதிகாரியிடம் தன பெயர், முகவரியை தர மறுத்தால் அல்லது தவறான பெயர், முகவரி தந்தால்
********
வாரன்ட் (பிடிப்பாணை) யில் இரண்டு வகை உண்டு. 
1. பிணையில் (Bail  ) விடக்கூடியது  
2. பிணையில் (Bail  ) விட முடியாதது 

இது பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம் 
*******
நன்றி : மக்கள் கண்காணிப்பகம் ( கைதானால் உங்கள் உரிமைகள் ")
6, வல்லபாய் சாலை சொக்கிகுளம், மதுரை - 2
மின்னஞ்சல் : info@pwtn.org
தொலை பேசி:0452-2531874

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget