சில இலவச மென்பொருட்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது நமக்கு வரும் இலவச இணைப்பு தான் SweetIM Toolbar. நமக்கு எது தேவையோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் தரும் இதை பலரும் விரும்ப மாட்டார்கள். இதை எப்படி நீக்குவது என்று இன்று பார்ப்போம்.
Mozilla Firefox:
Firefox ஓபன் செய்து Help >> Restart with Add-ons Disabled மீது கிளிக் செய்து உடனே Restart என்பதை கிளிக் செய்யவும். இப்போது Firefox Safe Mode - இல் ஓபன் ஆகும். இப்போது கீழே உள்ளது போல Reset all user preferences to Firefox defaults என்பதை கிளிக் செய்து விட்டு Make Changes and Restart என்பதை தரவும்.
அவ்வளவு தான் இனி SweetIM Toolbar பிரச்சினை முடிந்தது. இதனுடன் இன்னும் சில தொல்லைகள் நீங்கள் வைத்து இருந்தால் அவையும் தீர்ந்துவிடும்.
வழி 2 :
1. Firefox - ஐ ஓபன் செய்து URL Bar- இல் about:config என்பதை தரவும்.
2. அதில் உள்ள Search பகுதியில் sweetIM என்பதை தரவும். இப்போது கீழே உள்ளது போல வரும்.
3. இப்போது ஒவ்வொரு Preference Name மீதும் கிளிக் செய்து "Reset" என்பதை கிளிக் செய்யுங்கள்.
இவற்றை முடித்த பின்பு Firefox - இல் SweetIM பிரச்சினை இருக்காது.
Chrome:
1. Remove from Startup:
Chrome - ஐ ஓபன் செய்யும் வந்தால் நீக்கும் வழி இது. Wrench > Settings > On Startupஎன்பதை கிளிக் செய்யுங்கள்.
அதில் SweetIM இருந்தால் நீக்கி விட்டு உங்களுக்கு விருப்பமானதை வைத்து விடுங்கள்.
2. Remove from New Tab search:
புதிய Tab ஓபன் செய்யும் போது வந்தால், Wrench > Settings > Search > Manage search engines என்பதில் இருந்து SweetIM - ஐ நீக்கி விடுங்கள்.
3. Remove from Home page:
Wrench > Settings > Appearance என்பதில் Show Home button என்பதை செக் செய்து உங்கள் முகப்பு பக்கத்தை மாற்றி விடுங்கள்.
4. Remove from Extensions:
Wrench > Settings > Extensions என்பதில் SweetIM சம்பந்தப்பட்ட அனைத்தையும் நீக்கி விடவும்.
அவ்வளவு தான் உங்கள் Chrome உலவியில் இருந்து SweetIM நீக்கப்பட்டு விட்டது.
No comments:
Post a Comment