/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, January 21, 2013

அடிக்கடி வரும் Browser பிரச்சினைகளும், தீர்வுகளும்!!



இணையத்தில் நாம் இயங்க மிக முக்கியமான தேவை ப்ரௌசெர். நம்மையும் இணையத்தையும் இணைக்கும் இந்த மென்பொருள் சில சமயங்களில் நமக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணும், அவ்வாறு அடிக்கடி வரும் பிரச்சினைகளையும் அவற்றை எப்படி சரி செய்வது என்பதையும் பார்ப்போம். 

1. Browser ஓபன் ஆகவில்லை 

கணினியை ஒரு முறை Restart செய்யுங்கள், Antivirus மென்பொருள் ஒன்றில் கணினியை Scan செய்து பாருங்கள். அப்படியும் பிரச்சினை என்றால்

READ MORE
Ccleaner போன்ற மென்பொருள் மூலம் Cookies - ஐ Clear செய்யுங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Uninstall செய்து விட்டு Install செய்யுங்கள். 

2. தேவையில்லாத Toolbar - கள் 

இது நாம் நமக்கு வரவழைத்த பிரச்சினை, ஏதேனும் மென்பொருள் இன்ஸ்டால் செய்யும் போது (குறிப்பாக இலவச மென்பொருள்) இலவச இணைப்பாக இவையும் வந்து விடும். இன்ஸ்டால் செய்யும் போது சில இடங்களில் படித்து பார்த்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

இன்ஸ்டால் செய்யும் போது மறந்தவர்கள், Browser - இல் நீங்களாக நீக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலனவர்கள் எதிர்கொள்வது Babylon மற்றும் SweetIM. இதை எப்படி Remove செய்வது என்று ஏற்கனவே பதிவுகள் கற்போமில் உள்ளன.

இவை தவிர வேறு ஏதேனும் என்றால், இதே முறையிலேயே அதன் பெயரை தேடி நீக்கலாம், அல்லது கூகுளை நாடலாம். 

3. படங்கள்/பக்கங்கள் சரியாக தெரியவில்லை

  • முதலில் உங்கள் இணைய இணைப்பு வேகமாக உள்ளதா என்று பாருங்கள், மிக குறைவான வேகம் என்றால் இந்த பிரச்சினை வரும். வேகமானது தான் என்றால் வேறு Browser-இல் ஓபன் செய்து பாருங்கள். 
  • தற்போதைய  ப்ரௌசெரில் நீங்கள் Images Load ஆவதை Enable செய்துள்ளீர்களா என்று பாருங்கள், Disable என்று இருந்தால் Enable செய்யுங்கள். பெரும்பாலும் இதன் மூலம் படங்கள் தெரியும். {அப்படியும் படம் வரவில்லை என்றால் குறிப்பிட்ட தளத்தில் இருந்து அந்த படம் நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. }
  • பக்கங்கள் தெரிவதில் தொடர்ந்து பிரச்சினை என்றால் Virus Scan, Cookies Clear, Computer Restart போன்றவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

4. மிக மெதுவாக இயங்குகிறது. 

  • எனது இணைய வேகம் அதிகமானது தான் ஆனால் குறிப்பிட்ட ப்ரௌசெர் மட்டும் அவ்வப்போது மெதுவாக இயங்குகிறது என்பவர்கள், செய்ய வேண்டிய விஷயம் Cookies Clear செய்வது. 
  • இல்லை என்றால் வேறு ப்ரௌசெர்க்கு மாறுங்கள். 
  • தொடர்ந்து பிரச்சினை என்றால் உங்கள் கணினியில் RAM மெமரி அதிகப்படுத்த வேண்டும். 

5. Not Responding பிரச்சினை

இது பெரும்பாலோனோர் எதிர் கொள்ளும் பிரச்சினை, நீங்கள் பயன்படுத்தும் Add-on , Extension போன்றவற்றினால் இருக்கலாம். குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ நீக்குவதன் மூலம் இதை சரி செய்து விடலாம். 

6. Java Script பிரச்சினை

இது Java Script Enable செய்யாது இருந்தால் வரும் பிரச்சினை. உங்கள் ப்ரௌசெரில் கண்டிப்பாக Java Script Enable ஆகி இருக்க வேண்டும், அப்போது தான் இது சரி ஆகும். 

7. ஆடியோ, வீடியோ Play ஆவதில் பிரச்சினை 

இது பெரும்பாலும் Plugin பிரச்சினை Adobe Flash மற்றும் சில இதில் தேவைப்படுபவை. வேறு எதையாவது Plugin Install செய்யும்படி சொன்னால், அது பாதுகாப்பானதா என்று பார்த்து விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோ, வீடியோ எதையும் YouTube மூலம் கேட்பதே/பார்ப்பதே பாதுகாப்பானது. சில பெரிய தளங்கள் Own Hosting செய்து இருந்தால் அவற்றை நம்பலாம் (BBC, CNET, etc). 

8. Update பிரச்சினை

சிலருக்கு புதிய Version இன்ஸ்டால் செய்த பின் தான் பிரச்சினை என்று சொல்வார்கள். இதில் நிறைய பேர் கவனிக்க தவறும் ஒரு விஷயம் ப்ரௌசெரின் எந்த Version - ஐ இன்ஸ்டால் செய்கிறோம் என்று தெரியாமல் இன்ஸ்டால் செய்வது. 

Firefox ப்ரௌசெர் Beta, Aurora, Full என மூன்று முறை ஒரு Version - ஐ வெளியிடும். இதில் Beta, Aurora போன்றவற்றை Developer Release என்று சொல்லலாம், அவை சில பிரச்சினைகளோடு உள்ள மாற்றங்களோடு வரும், Full Version - இல் தான் அவை களையப்படும். ஆனால் நாம் இதை இன்ஸ்டால் செய்து இருந்தால் ப்ரௌசெரில் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். 

இதே போல Chrome ப்ரௌசெர் Beta, Dev, Stable (Full) என்று மூன்று முறை ஒரு வெளியீட்டை வெளியிடும் இதில் Stable தான் எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கும். மற்ற இரண்டும் சில பிரச்சினைகளோடு தான் வரும். 

எனவே உங்கள் ப்ரௌசெர் Beta, Aurora அல்லது Beta , Dev ஆக இருந்தால் அவற்றை Uninstall செய்து விட்டு Full Version - ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினைகளை சரி செய்யலாம். 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget