ஒவ்வொரு முறையும் கணிணியில் புதியதாக Device களை இணைக்கும் போதும் கணிணி Registry ல் பதிவு செய்து கொள்கிறது. நாம் அந்த டிவைஸ்களை பயன்படுத்துவதை நிறுத்தியபின்னரும் அந்த Registry கள் கணிணியிலேயே தொடர்நது காணப்படும்.
இந்த பைல்கள் GHOST FILES என்று அழைக்கப்படுகின்றது. இவற்றால் கணிணியின் வேகத்தில் தடை ஏற்படுகிறது. இந்த பைல்களை நீக்க GHOST BUSTER மென்பொருள் பயன் படுகினறது.
ஒவ்வொரு முறையும் கோஸ்ட் பஸ்டர் மென் பொருளை தொடங்கியவுடன் அதுவாகவே ஸ்கேன் செய்து கணிணியில் உள்ள அனைத்து டிரைவர் பட்டியலையும் முன்னே நிறுத்துகிறது. கோஸ்ட்டிரைவர்கள் தனியாக வேறு வண்ணத்தில் முன்னிருத்தப்படுகிறது.
சில முக்கியமான டிரைவர்கள் கணிணியின் இயங்குதல் மற்றும் கிராபிக்ஸ் மற்றும் ஒலி அமைப்புகளுக்ககாக உள்ளது. அவற்றை நீக்கினால் கணிணி இயங்குதலில் பிரச்சனைகள் ஏற்படும். இந்த வகையான சிஸ்டம் டிரைவர்கள் தனியாக காட்டப்படுகின்றன.
டிரைவரைகளை வகைப்படுத்திய பின்னர் கோஸ்ட் பைல்களை ரிமூவ் செய்ய வேண்டும். ஒரு பைலை நீக்கல் வகையில் சேர்க்க ஆட் டிவைஸ் மெனுவையும், ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை நீக்கல் மெனுவில் சேர்க்க ஆட் கிளாஸ் ஐம் பயன்படுத்தலாம்.
தெரியாமல் ஒரு முக்கியமான டிரைவரை ஆட் செய்துவிட்டால் ரிமுவ் டிவைஸ் மெனுவை கொண்டு அதை நீக்கலாம். கோஸ்டாக ஆட் செய்யப்பட்ட பைல்களின் விவரங்களை காண ப்ராபர்டீஸ் மெனுவை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு முறையும் கோஸ்ட் பைல்களை நீக்குவதற்கு முன்னர் Create Restore Check Point உருவாக்கிக் கொள்ள வேண்டும். தவறாக பைல்களை நீக்கிவிட்டால் அவற்றை மீண்டும் பெற இது உதவும்.
இறுதியாக இடது மூலையில் காணப்படும் ரிமூவ் கோஸ்ட் பட்டனை அழுத்துவதன் மூலம் தேவையற்ற கோஸ்ட் பைல்களை கணிணியில் இருந்து நீக்கலாம்.
No comments:
Post a Comment