யூடியூப் வீடியோக்களை தேடுவதற்கு என்றே பத்து பதினைந்து தேடியந்திரங்களாவது இருக்கின்றன.இந்த பட்டியலில் விஸ்பேன்டையும் சேர்த்து கொள்ளலாம்.
விஸ்பேன்ட் யூடியூப் தேடியந்திரங்களிலேயே வித்தியாசமானதா என்று தெரியவில்லை ஆனால் எளிமையானது என்று தயங்காமல் சொல்லலாம்.
வடிவமைப்பில் கூகுலின் நகல் போல இருக்கும் இந்த தேடியந்திரத்தின் தேடல் கட்டத்தில் எந்த தலைப்பில் வீடியோ தேவையோ அதனை டைப் செய்தால் போதும் உடனே தொடர்புடைய வீடியோக்களை பட்டியலிடுகிறது.
தேடல் முடிவுகள் பட்டியலிடப்படும் விதம் தான் கவனத்திற்குறியது.எல்லா வீடியோக்களும் வரிசையாக புகைப்பட துண்டுகளாக இடம் பெறுகின்றன.அவற்றோடு வேறு இணைப்புகளோ குறிப்புகளோ கிடையாது.எந்த படத்தில் கிளிக் செய்தாலும் அதற்கான யூடியூப் விடியோ அருகே தனியே தோன்றுகிறது.அவ்வளவு தான்.வேறு எந்த கவனச்சிதறலும் கிடையாது.
வரிசையாக வீடியோக்களாக பார்த்து ரசிக்கலாம்.அடுத்த பக்கத்திற்கு போகலாம்.வேறு குறிச்சொல் கொண்டு தேடலாம்.
யூடியூப் முழுவதும் தேடலாம் அல்லது இசை சார்ந்த வீடியோக்களை மட்டும் தேடலாம்.
யூடியூப்பில் மணிக்கனக்கில் செலவிடுபவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி
;http://www.vizband.co.uk/main.php
No comments:
Post a Comment