இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் இத்தகைய சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
ஒரே கிளிக்கில் இணையத்தின் பல இடங்களில் இருந்து தகவல்களை தேடி ஒரே இடத்தில் தருவதாக கூறும் இந்த தேடியந்திரம் அதனை அழகாக செய்கிறது.
அதாவது இதில் எந்த பதத்தை தேடினாலும் அந்த பதம் தொடர்பான முடிவுகளை நான்கு பத்திகளாக பிரித்து தருகிறது.முதல் பத்தியில் பொதுவான இணைய முடிவுகள் இடம் பெறுகின்றன.அதன் பக்கத்தில் அந்த பதத்திற்கான யூடியூப் வீடியோக்களும் டிவிட்டர் குறும்பதிவுகளும் ,கடைசி பத்தியில் புகைப்படங்களும் இடம் பெறுகின்றன.
ஆக ஒரே கிளிக்கில் தேடும் பதம் அதாவது குறிச்சொல் தொடர்பான இனைய முடிவுகள்,வீடியோக்கள்,புகைப்படங்கள்,மற்றும் குறும்பதிவுகளை பார்த்து விடலாம்.எல்லாமே அடுக்கப்பட்டது போல பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு எளிதாக கிரகித்து கொள்ளும் வகையில் இருப்பது நல்ல விஷயம்.
புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் தனித்தனியே தேடிக்கொண்டிருக்காமல் ஒரே கிளிக்கில் தேட முடிவது தான் இந்த தேடியந்திரத்தின் சிறப்பாக உள்ளது.
எப்போதெல்லாம்
இதே போல குறும்பதிவு,வீடியோ,புகைப்படம் என எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது இந்த தேடியந்திரம் பயனுள்ளதாக இருக்கும்.இந்த தேடியந்திரம் கொஞ்சம் சுவாரஸ்யமானது தான்.கூகுல் தேட்ல முடிவுகளை பயன்படுத்தி கொள்ளும் தேடியந்திரங்கள் போல இந்த தேடியந்திரம் பிங் தேடல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.
தேடியந்திர முகவரி;http://www.wordonthewire.com/
No comments:
Post a Comment