விண்டோஸ் 8 நுகர்வோருக்கான தொகுப்பினைப் பலரும் பயன்படுத்தி வருவது தெரிகிறது. எனவே, விண்டோஸ் 8 தொகுப்பிற்கான அடுத்த ஷார்ட் கட் கீ தொகுப்பு இதோ:
Alt: மறைக்கப்பட்ட மெனு பார் காட்டப்படும்.
Alt + D: அட்ரஸ் பார் தேர்ந்தெடுக்கப்படும்.
Alt + P: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் Preview Pane காட்டப்படும்.
Alt + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் முன்னோக்கிச் செல்லும்.
Alt + Shift + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் பின்னோக்கிச் செல்லும்.
Alt + F4: அப்போதைய விண்டோ மூடப்படும். டெஸ்க்டாப்பில் ஷட் டவுண் விண்டோ மூடப்படும்.
Alt + Spacebar: அப்போதைய விண்டோவி லிருந்து ஷார்ட் கட் மெனுவினைப் பெறும்.
Alt + Esc: திறந்திருக்கும் புரோகிராம்களைச் சுற்றி வரும். அவை திறக்கப்பட்ட வரிசையில் இது மேற்கொள்ளப்படும்.
Alt + Enter: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்திற் கான ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
Alt + PrtScn: அப்போதைய விண்டோ காட்சி யின் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லப்படும்.
Alt + Up: விண்டோஸ் எக்ஸ்புளோரர் போல்ட ரில் ஒரு போல்டர் முன் செல்லப்படும். (எக்ஸ்பி (XP) சிஸ்டத்தில் Up Arrow போலச் செயல்படும்)
Alt + Left Arrow: முந்தைய போல்டரைக் காட்டும்.
Alt + Right Arrow: அடுத்த போல்டரைக் காட்டும்.
Shift + Insert CD/DVD: ஆட்டோ பிளே அல்லது ஆட்டோ ரன் கிளிக் செய்யப்படாமலேயே சிடி/டிவிடி இயக்கப்படும்.
Shift + Delete: தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலுமாக நீக்கப்படும். ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு செல்லப்படாது.
Shift + F6: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும்.
Shift + F10: தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக் கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Shift + Tab: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும். (Shift + F6 போல)
Shift + Click: தொடர்ச்சியாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கும்.
Shift + Click: டாஸ்க் பார் பட்டனில் கிளிக் செய்கையில், புரோகிராமின் புதிய இயக்கக் காட்சியைக் கொடுக்கும்.
Shift + Rightclick: தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Ctrl பட்டனுடன் பெரும்பாலும் தற்போது பழக்கத்தில் உள்ள செயல்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றம் எதுவும் இல்லை.
No comments:
Post a Comment