/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, July 2, 2012

இந்தியாவில் 53 மொழிகள் உட்பட உலகில் அழியும் நிலையிலுள்ள 3000+ மொழிகளை காக்க கூகுளின் புதிய திட்டம்



மனிதர்கள் தங்களது கருத்துக்களை மற்றவர்களிடத்தில் பரிமாறி கொள்ள உருவாக்கி கொண்டது தான் மொழிகள். மொழி உருவாக அடிப்படை காரணம் ஒன்று என்றாலும் இனத்தை பொருத்தும் வாழும் இடத்தை பொருத்தும் மொழிகள் பலவேறு வகைகளாக பிரித்து வித்தியாசமான எழுத்து வடிவங்களை கொடுத்து வேறுபடுத்தி பேசி, எழுதி வருகின்றனர்.



உலகில் அதிக மொழிகளை பேசும் நாடு என பெருமை கொண்ட இந்தியாவில் மட்டுமே சுமார் 1652 மொழிகள் பேச்சு வாக்கில் உள்ளதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது. தொழில் நுட்ப மாற்றங்களாலும், குறிப்பிட்ட மொழி பேசும் இனத்தவர்களின் அழிவினாலும் உலகம் முழுவதும் சுமார் 3000 க்கும் அதிகமான மொழிகள் அழிவு நிலையில் உள்ளதாம். இந்தியாவில் மட்டும் சுமார் 53 மொழிகள் அழிவு நிலையில் இருக்கிறதாம்.  ஓரிரு தலைமுறையில் இந்த மொழிகள் அழிந்து விடும் அபாயத்தில் இருக்கிறதால் பின்னர் வரும் சந்ததியினருக்கு இவைகளை பற்றி தெரியாமலே போய் விடும்.

இந்த அழிவு நிலையில் உள்ள மொழிகளை காக்க பின்னர் வரும் சந்ததியினரும் இந்த மொழிகளை பற்றி அறிந்து கொள்ள கூகுள் Linguistic Diversity நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதற்காக www.endangeredlanguages.com என்ற புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த தளத்தில் சென்று Explore பட்டனை அழுத்தி உலக வரைபடம் வரும் அதில் எந்தெந்த நாடுகளில் எத்தனை மொழிகள் அழிவு நிலையில் உள்ளது என்ற முழு பட்டியலையும் பார்த்து கொள்ளலாம்.


ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அந்த அந்த புள்ளி போன்ற ஐகான் மீது கிளிக் செய்தால் அந்த மொழியின் பெயரை காட்டும். அந்த மொழியின் மீது கிளிக் செய்தால் அந்த மொழியை பற்றி சில விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில் பச்சை நிறத்தில் உள்ள மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ள மொழிகளாகும். 


இப்படி ஒவ்வொரு நாட்டிலும் அழிவின் இருக்கும் மொழிகளை பட்டியலிட்டு காட்டுகிறது கூகுளின் வரைபடம். 

நாம் செய்ய வேண்டியது என்ன :
இந்த அழிவு நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற கூகுள் உங்களின் உதவியை நாடுகிறது. ஒருவேளை இந்த மொழி பேசுபவர்களை கண்டால் அவரின் போட்டோ மட்டுமே வீடியோவை எடுத்து இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். மற்றும் இந்த மொழிகளின் எழுதிய பக்கங்கள் ஏதேனும் கிடைத்தாலும் அதை ஸ்கேன் செய்து இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். நீங்கள் அனுப்பும் ஆவணம் அந்த குறிப்பிட்ட மொழிக்குள் சேர்க்கப்பட்டு விடும். இனி எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த விவரங்களை வரும் சந்ததியினர் பார்க்க ஏதுவாக இருக்கும்.



தங்களால் முடிந்தால் வருங்கால சந்ததியினருக்கு உதவி செய்வோம். மற்றும் சமூக தளங்களில் பகிர்ந்து நண்பர்களுக்கும் தெரிவித்தால் மேலும் பல நண்பர்களை சென்றடையும்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget