/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, February 21, 2013

கூகுள் குரோம் உலாவியின் உதவியுடன் தொலைவிலுள்​ள கணனிகளை கட்டுப்படு​த்துவதற்கு(Monitor Systems)!!



ஒரு கணனியிலிருந்து பிறிதொரு கணனியின் Desktop - இன் செயற்பாடுகளை அவதானிப்பதற்கோ அல்லது பிறிதொரு கணனியை தொலைவிலிருந்து கட்டுப்படுத்துவதற்கு Teamviewer போன்ற பிரபலமான மென்பொருட்கள் காணப்படுகின்றன.இவற்றிற்கு மத்தியில் கூகுள் நிறுவனமானது தனது குரோம் உலாவியின் மூலமாக இச்செயற்பாடுகளை மேற்கொள்ளவதற்காக Chrome Remote Desktop எனும் Application ஒன்றினை Google Webstore - இல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Application ஆனது
 புதிதாக அறிமுகமான குரோம் பதிப்புக்களில் மட்டுமே செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் Windows, Mac, Linux இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலும் இது செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.

அத்துடன் இந்த Application கட்டுப்படுத்துவதற்காக எதிர்பார்க்கும் அனைத்து கணனிகளிலும் நிறுவியிருக்க வேண்டியது அவசியமாகும்.

இதனை கணனியில் நிறுவி முதன் முறையாக செயற்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியினூடான ஒப்புதலை வழங்குமாறு கேட்கும்.

அதன் பின்னர் Start பொத்தானை அழுத்தி இணைப்பினை Enable செய்யவும். தொடர்ந்து மின்னஞ்சல் முகவரி மூலம் பெறப்பட்ட PIN இலக்கத்தினை 2 தடவைகள் உட்செலுத்தி OK பொத்தானை அழுத்தவும்.

பின்னர் YES பொத்தானை அழுத்துவதன் மூலம் Chrome Remote Host Service - இனை நிறுவிக் கொள்ளவும். தொடர்ந்து கூகுள் கணக்கு மற்றும் PIN இலக்கத்தினை பயன்படுத்தி மீண்டும் இணைப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இப்போது நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அல்லது இணைப்பிலுள்ள கணனியினை My Computers பகுதியில் காணலாம்.

LINK:

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget