அதாவது சீனாவைச் சேர்ந்த கணணி வல்லுநர்கள் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் பணி புரியும்
READ MORE
உயர் மட்ட நிருபர்கள் மற்றும் உறுப்பினர்களின் ரகசியக் கணக்குகளின் கடவுச்சொற்களைத் திருடியும் நீக்கியும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
நியூயோர்க் டைம்ஸ் அளித்த தகவலின் படி கடந்த 4 மாதங்களாக இந்த சைபர் தாக்குதல் நிகழ்ந்து வருவதாகவும் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ இன் உறவினர்கள் மீது நியூயோர்க் டைம்ஸ் சில விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இது ஆரம்பமானதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வென் ஜியாபாவோ இன் குடும்ப உறுப்பினர்களின் பில்லியன் டாலர் கணக்கான வருமானம் எப்படிப் பெறப்பட்டது என பல்வேறு கோணங்களில் விசாரித்து அறிக்கை வெளியிட்டதால் சீனாவில் டைம்ஸின் இணையத்தளம் ஏற்கனவே முடக்கப் பட்டிருந்தது.
இதேவேளை தனது கணணிகளைத் தாக்கியது யாரென நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை புலனாய்வு செய்தது. இதன் மூலம் கிடைக்கப் பெற்ற டிஜிட்டல் ஆதாரத்தில் சீன இராணுவத்தில் உள்ள நிபுணர்களின் வழிமுறைகளைக் கையாண்டு டைம்ஸின் நெட்வேர்க்கை சிலர் ஹேக் செய்தமை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
எனினும் இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கருத்துரைக்கையில் இந்த குற்றச்சாட்டின் படி சீன நாட்டில் இருந்து தான் டைம்ஸின் கணணிகள் ஹேக் செய்யப்பட்டன என்பதை நிரூபிப்பது கடினம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட பிரத்தியேக அறிக்கையில் சீன இராணுவம் இதுவரை எந்தவொரு ஹேக்கிங் நடவடிக்கைக்கும் ஆதரவளித்ததில்லை என உறுதி படத் தெரிவித்துள்ளார். |
|
No comments:
Post a Comment