/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Tuesday, April 3, 2012

வருகிறது கூகுள் டிரைவ் – [Cloud Computing]


கூகுள் தனது அடுத்த முயற்சியாக கூகுள் டிரைவ் (Google Drive) வசதியை ஆரம்பிக்கப்போகிறது. இது தான் தற்போது இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கும் செய்தி. அதெல்லாம் சரிங்க! கூகுள் ஓகே… கூகுள் டிரைவ்னா என்ன?
இதை தெரிந்து கொள்ளும் முன் இதற்கு முன்னோடியாக இருக்கும் Dropbox பற்றி தெரிந்து கொள்வோம்.
Dropbox வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]தற்போது இணையம் அனைவரிடையே மிக வேகமாக பிரபலமாகி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எப்போதுமே ஒரு விஷயம் பிரபலம் ஆகிறது என்றால் அதனோடு தொடர்புடைய விசயங்களும் வளர்ச்சியடைந்து வரும். எளிமையாக கூறுவதென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த திரைப்படங்களையே எடுத்துக்கொள்ளலாம் முதலில் எப்படி படங்கள் வந்தது தற்போது எந்த அளவிற்கு அதனோடு தொடர்புடைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்பதை அறிவோம்.. எடுத்துக்காட்டாக அனிமேஷன் 3D கிராபிக்ஸ் என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. இவை எல்லாம் வரும் என்று கருப்பு வெள்ளை காலங்களில் யாரும் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் நம்பி இருக்க மாட்டார்கள்.
இது போல இணையத்திலும் கணக்கில் அடங்கா தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இன்றைய புதிய வசதி ஒரு வருடத்தில் பழையதாகி விடுகிறது அந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில்நுட்பம் தான் “Cloud computing”
Cloud Computing என்றால் என்ன?
இது பற்றி ரொம்ப விளக்கினால் புதிதாக கேள்விப்படுகிறவர்களுக்கு குழப்பமாக இருக்கும் என்பதால் சுருக்கமாகக் கூறுகிறேன். Cloud Computing என்பது நமது தகவல்களை ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு அதை நாம் எந்த இடத்தில் இருந்தும் இணையம் அல்லது வழக்கமான நமது நெட்வொர்க் மூலம் பயன்படுத்தும் ஒரு வசதியாகும். இதன் மூலம் எந்த இடத்தில் இருந்து வேண்டும் என்றாலும் நாம் தCloud Computing வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]கவல்களை பெற முடியும்.
இன்னும் சுருக்கமாக நமது மின்னஞ்சலை எங்கே இருந்து வேண்டும் என்றாலும் நம்மால் எந்த வித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்த முடியும். எப்படி? காரணம் நமது தகவல்கள் யாஹூ ஜிமெயில் ஹாட்மெயில் போன்ற வழங்கிகளில் (Server) உள்ளது இதனால் இணையம் மூலம் நம்மால் எளிதாக எந்த சிக்கலும் இல்லாமல் பார்க்க முடிகிறது.
இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் யோசித்துப்பாருங்கள் அதாவது
உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் இது போன்ற இடத்தில் இருந்தால்!… இது தான் Cloud Computing. உங்கள் தகவல்கள் அனைத்தும் எடுத்துக்காட்டாக கூகுள் வழங்கியில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் உங்களால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் இருந்தால் போதும் உங்கள் தகவல்களைப் பெற முடியும் அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் போது தான் இதை பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இல்லை, எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் Excel கோப்பை அப்டேட் செய்ய முடியும்.
உங்களில் ஒரு சிலர் சில முக்கிய கோப்புகளை மின்னஞ்சல்களிலோ அல்லது வேறு தளங்களிலோ சேமித்து வைத்து இருப்பீர்கள். எதற்காக? அவசரமாக தேவைப்படும் போது பயன்படுத்த. உதாரணத்திற்கு உங்கள் பிறப்பு சான்றிதல் அவசரமாக தேவைப்படுகிறது ஆனால் அதனுடைய கோப்பு (File) உங்கள் வீட்டு கணினியில் இருக்கிறது ஆனால் வீட்டிற்கு சென்று எடுத்து வரும் அளவிற்கு நேரமில்லை அல்லது நீங்கள் தொலைவில் இருக்கிறீர்கள் என்ன செய்வது? இதை நீங்கள் கூகுள் பிகாசாவிலோ அல்லது வேறு இடத்திலோ சேமித்து வைத்து இருந்தால் உடனடியாக உங்களால் அருகில் உள்ள ஏதாவது ஒரு பிரவுசிங் சென்டர் சென்று பிரிண்ட் செய்து பயன்படுத்த முடியும். எவ்வளவு நேரம் மிச்சம்! அதோடு வேலையும் விரைவாக முடியும்.
முன்பு இணையத்தின் வேகத்தின் அளவு மிக மிக மெதுவாக இருந்தது ஆனால் தற்போது இதன் வேகம் அதிகரித்து இருக்கிறது எனவே இது போன்ற வசதிகள் உருவாகி வருகின்றன.
இதற்கு மேல் விளக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இனி Dropbox என்றால் என்ன? என்று பார்க்கலாம்
Dropbox என்பது ஒரு தளம். இதில் இலவசமாக நமக்கு 2 GB இடம் தருகிறார்கள் மற்றும் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் இன்னும் சில MB களை பெற முடியும். பணம் கட்டினால் மேலும் நமக்கு தேவையான அளவு இட வசதியைப் பெற முடியும்.
இது எப்படி வேலை செய்கிறது என்றால் இவர்கள் தரும் ஒரு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் (வீட்டுக்கணினி அலுவலக கணினி என்று எங்கு தேவையோ அங்கு) இதை நிறுவியவுடன் உங்களுடைய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைந்து கொண்டால் உங்களது கணினியில் Dropbox என்ற பெயரில் ஒரு ஃபோல்டர் வந்து விடும். இதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவு வரை சேமிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டு கணினியில் JPG கோப்பை சேமிக்கிறீர்கள் பின் அலுவலகம் வந்து உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் நீங்கள் வீட்டுக் கணினியில் சேமித்த கோப்பு இங்கேயும் வந்து விடும். இணையம் அவசியம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
இணையம் இல்லாமலும் உங்கள் கணினியில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும் ஆனால் அப்டேட் செய்தால் இங்கே மட்டுமே அப்டேட் ஆகும் மற்ற இடங்களில் ஆகாது காரணம் இணைய இணைப்பு இல்லாதது.
அதே போல நீங்கள் ஒரு Text கோப்பை அடிக்கிறீர்கள் அதை வேறு கணினியில் அப்டேட் செய்தால் உங்கள் வீடு அலுவலகம் என்று அனைத்து இடத்திலும் அப்டேட் ஆகி விடும் காரணம் உண்மையாக அந்த கோப்பு இருக்கும் இடம் Drobox வழங்கி ஆகும். நீங்கள் இதைப் பயன்படுத்த கண்டிப்பாக இணையம் அவசியமாகும். iPhone Android என்று தொலைபேசிகளிலும் இந்த வசதி உள்ளது. எனவே இணையம் இருந்தால் எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் தகவல்களை பார்க்க முடியும். இதை நான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன் மிக மிக அருமையான சேவை. உங்களுக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.
இதை Windows , Mac , Linux மற்றும் Mobile ல் பயன்படுத்தலாம். உங்கள் ஹார்டிஸ்க் செயலிழந்து விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை உங்கள் தகவல்கள் மற்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்கும், இதுவும் இந்த சேவையின் மிக முக்கிய பயன்.
மைக்ரோசாப்ட் கூட இது போல தருகிறது ஆனால் இது போல மென்பொருள் வைத்தல்ல… அதனால் 25 GB இடம் கொடுத்தும் பிரபலம் ஆகாமல் கடை காற்று வாங்கிக்கொண்டு இருக்கிறது icon smile வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing] சென்ற வருடம் iOS 5 மூலம் Cloud storage வந்த ஆப்பிள் நிறுவனம் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனாளர்களைப் பெற்று இந்த தொழில்நுட்பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது அதிலும் கடைசி 15 மில்லியன் பயனாளர்களை 21 நாட்களில் பெற்று இருக்கிறது.
கூகுள் டிரைவ்
google drive வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]தற்போது தான் தலைப்புக்கே வருகிறேன் icon smile வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing] இந்த Dropbox வசதியைத் தான் கூகுள் தரப்போகிறது. கூகுள் ஏற்கனவே தனது Google Docs என்ற வசதி மூலம் இதை தருகிறது ஆனால் Dropbox போன்று இதற்கு என்று தனியாக மென்பொருள் வைத்து அல்ல. தற்போது இதற்கு வரவேற்பு அதிகமாவதை உணர்ந்து இந்த வசதியைத் தர திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
நான் Google Docs பயன்படுத்துகிறேன். இதுவும் ரொம்ப அருமையான சேவை, இலவசமாக 1 GB கொடுக்கிறார்கள். நமக்கு அதிக அளவில் இடம் வேண்டும் என்றால் பணம் கட்டி இதில் பெற்றுக்கொள்ளலாம், நான் ரொம்ப நாள் முன்பே நினைத்தேன் கூகுள் ஏன் Dropbox போல இன்னும் வராமல் இருக்கிறது என்று! தற்போது வரப்போகிறது.
இனி வரும் காலங்களில் நமது கணினிகளில் ஹார்ட் டிஸ்க் இயங்கு தளத்திற்கு (OS) மட்டுமே பயன்படும் என்று கருதப்படுகிறது நம் தகவல்கள் எல்லாம் Cloud Computing முறையில் வந்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள் ஆனால் இந்தியாவிற்கு இது போல வர பல வருடங்கள் ஆகும் காரணம் இணைய வேகம் தான். தென் கொரியா அமெரிக்கா சிங்கப்பூர் ஜப்பான் போன்ற இணைய வசதி சிறப்பாக உள்ள நாடுகள் இதில் முதலில் வர வாய்ப்பு உள்ளது. அதோடு நமது நாட்டில் இன்னும் இணையம் செலவு மிக்கதாகவே உள்ளது. Unlimited வசதி இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் இல்லை என்றால் மிகுந்த செலவு பிடிக்கும் விசயமாக இருக்கும்.
Cloud computing என்பது மிகப்பெரிய விஷயம் அதில் ஏகப்பட்ட தகவல்கள் விஷயங்கள் அடங்கி உள்ளது. Just like that ஒரு பதிவில் கூறிவிடக்கூடிய செய்திகள் அல்ல. நான் மேற்கூறியது சிறு அறிமுகம் மட்டுமே. சிலருக்கு குழப்பமாக இருந்து இருக்கலாம் இருந்தாலும் ஓரளவாவது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் icon smile வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget