விரைவில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இரண்டு மொபைல் போன்கள் வர இருக்கின்றன. அவை குறித்து இங்கு காணலாம்.
1. எல்.ஜி. சி320 இன் டச் லேடி:
இதற்கு சூட்டிய பெயர் இதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. அதற்கேற்ப அழகான ஸ்லைடர் வடிவமைப்பில் இந்த போன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் எடை 105 கிராம். பரிமாணம் 91x63x1.4 மிமீ. இதன் மெமரி 60 எம்பி.
மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நீலம், வெள்ளை, இளஞ்சிகப்பு மற்றும் ஆரஞ்ச் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். இதன் கேமரா 2 எம்பி திறன் கொண்டது. வீடியோ பதிவு வசதியும் கொண்டது.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளன. A2DP இணைந்த புளுடூத் நெட்வொர்க் இணைப்பினைத் தருகிறது. அக்ஸிலரோ மீட்டர் சென்சார் இயங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,999 ஆக இருக்கலாம்.
2. மோட்டாரோலா கிளீம்:
இது ஒரு ஸ்டைலான கிளாம் ஷெல் மாடல். இரு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் 2.4 அங்குல அகலத்தில் திரை, 2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, புளுடூத், 16 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.
இதன் பரிமாணம் 106x53x13.9 மிமீ; எடை 105 கிராம். இதன் திரை 240x320 பிக்ஸெல் திறனுடன் பளிச்சிடுகிறது. முகவரி ஏட்டில் 800 முகவரிகளைப் பதிந்து இயக்கலாம். உள் நினைவகம் 5 எம்பி தரப்பட்டுள்ளது. போட்டோ மூலம் அழைப்பு விடுக்கலாம்.
ஜி.பி.ஆர்.எஸ். வசதி உண்டு. A2DP இணைந்த புளுடூத் நெட்வொர்க் இணைப்பினைத் தருகிறது. கேமரா வீடியோ பதிவு மற்றும் இயக்கம் தருகிறது. 1600x1200 பிக்ஸெல்களில் காட்சி பதிவு மேற்கொள்ளப்படுகிறது. எஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., மின்னஞ்சல் வசதி உண்டு. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இயங்குகிறது.
எம்பி3 பிளேயர் பல பார்மட்டுகளில் உள்ள பைல்களை இயக்குகிறது. 750 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. தொடர்ந்து 6 மணி 20 நிமிடம் பேசலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.5,000.
No comments:
Post a Comment