உலாவிகளில் பெரும்பாலும் பல இணைய உலாவிகள் தங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்க வழிவகைகள் இல்லாமல் இருக்கிறது ஆனால் கூகிளை பொருத்த மட்டில் கூகிள் முதற்பு பக்கம் முதல் அனைத்துமே பயனாளிகளின் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். தற்போது கூகிள் குரோம் உலாவியின் வடிவமைப்பை நம் விருப்பப்படி மாற்றி அமைக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.chromethememaker.com
இத்தளத்திற்கு சென்று நாம் Frame ,Background,Toolbar,Tab என்பதில் நம் விருப்பபடி பேக்ரவுண்ட் என்ன படம் வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கலாம் அல்லது எண்ண வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம். எல்லாம், தேர்ந்தெடுக்கும் போதே Preview பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. எல்லாம் தேர்ந்தெடுத்து நமக்கான கூகிள் குரோம் தீம் உருவாக்கிய பின்னர் Theme name என்பதில் நமக்கு பிடித்த பெயரை கொடுத்து Apply theme என்பதை சொடுக்கினால் சில நிமிடங்களில் நாம் உருவாக்கிய வடிவமைப்பு படி கூகிள் குரோம் தீம் மாற்றம் பெற்றுவிடும். Compile and Download என்பதை சொடுக்கி நம் கணினியில் தறவிரக்கி பின் தேவைப்படும் போது எளிதாக நிறுவலாம். கண்டிப்பாக கூகிள் குரோம் தீம்(Chrome theme) பயன்படுத்துபவர்கள் , தாங்கள் விரும்பும் படத்தை கூகிள் குரோம்-ல் வைக்க விருப்பம் உள்ளவர்கள் என அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment