/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, July 25, 2012

பிட் டொரன்ட் - ஆச்சர்யம்!





இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு சர்வர்களையே நாடுபவர்கள் அதிகம். அவர்களுக்காக டொரன்ட் பற்றி இந்த பதிவில் கூறப்படுகிறது. படித்து பயன்பெறுங்கள்.


டொரன்ட் பயனாளர் முதல் பயனாளர் வரை என்ற கோட்பாட்டை பயன்படுத்துகிறது. இதன் மூலம் நீங்கள் டவுன் லோடு செய்வதற்கு முழுவதும் சர்வரை மட்டுமே எதிர்பார்க்க வேண்டாம். அதிகமான பயனாளர்கள் டவுன்லோடு செய்யும் போது வேகம் குறையாது. விலை உயர்ந்த சர்வர்கள் இணையதளத்திற்கு குறையாது. பெரிய பயனாக சர்வர் வேகம் குறையாது.

இதில் டவுன்லோடு பைல் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதியாக டவுன்லோடு செய்து சேமிக்கப்படும். எடுத்துகாட்டாக நீங்கள் ஒரு மென் பொருளை 30 சதவீதம் டவுன்லோடு செய்திருப்பீர்கள். உங்களுக்கு அடுத்து வருபவருக்கு சர்வரில் இருந்து ஆணை வழங்கப்பட்டு உங்களுடைய 30 சதவீத முழுமை அடைந்த பகுதியில் இருந்து அவருக்கு டவுன்லோட் செய்யப்படும். இதனால் டிராபிக் கட்டுப்படுத்தப்படுகிறது. சர்வர் பயனில் இல்லாவிட்டால் கூட பைல்களை கிளையன்ட்களிடம் இருந்து பெறலாம்.

இந்த படத்தை ஒரு முறை பாருங்கள்.






இந்த புரோட்டோகாலை கண்டறிந்தவர் பிரான் ஹொகீன். மைக்ரோசாப்ட் போன்ற பெரிய கம்பெனிகள் கூட தங்களுடைய டெமோ பைலை அளிக்க இந்த புரோட்டோகாலை அதிகம் பயன்படுத்துகிறது.

பயன்படுத்தாதவர்கள் ஒருமுறை பயன்படத்தி பாருங்கள்


ஏன் மழைத்துளிகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன தெரியுமா உங்களுக்கு?




 மழைத்துளிகள் என்றாலே ஒரு வித பரசவம் மனதில் எழுவது இயல்பு. இயற்கை அன்னையின் அந்த சவரில் (shower) குளிக்க விரும்பாத ஜென்மங்களே இருக்க முடியாது எனலாம்.
 
அந்த மழைத்துளிகள், வளிமண்டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக் குறைவால்.. தூசித்துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும் போது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பூமியை நோக்கி விழுகின்றன.
 
அவ்வாறு விழும் நீர்த்துளிகள் கோளமாக வெவ்வேறு அளவுகளில் இருப்பதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே காணலாம். ஏன் அவை அப்படி இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகளும் ஆராயத் தவறவில்லை.
 
வளிமண்டலத்தில் உள்ள காற்றின் கூறுகள் மழைத்துளிகளின் பூமி நோக்கிய இயக்கத்தை எதிர்ப்பதால் மழைத்துளிகளுக்கும் காற்றுத் துணிக்கைகளுக்குமிடையே உராய்வு உருவாகி ஒன்றின் பயணத்தை மற்றையது இடையூறு செய்ய முற்படுவதால் அந்த உராய்வைக் குறைக்கும் நோக்கோடு மழைத்துளிகள் சாத்தியமான சிறிய மேற்பரப்பை உருவாக்கும் வகையில் கோள அமைப்பைப் பெறுவதாகவும் இதற்கு நீரின் மேற்பரப்பு இழுவிசை (Surface tension) உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
 
அப்போ ஏன் மழைத்துளிகள் ஒரு சீராக இன்றி வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன என்று கேட்டால் அதற்கு மழைத்துளிகள் விழும் போது ஒன்றை ஒன்று முட்டி மோதி சேர்வதும் பிரிவதும் நிகழ்வதால் அவற்றின் பருமன் மாறுபடுகின்றன என்றும் கூறினர் விஞ்ஞானிகள்.

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!





இன்னிக்கி செல்போன் இல்லாம யாரும் இல்ல!
தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க!
சாப்பிடுறாங்களோ இல்லையோ ரீசார்ஜ் பண்றாங்க! டாப் அப் பண்றாங்க!
மொத்தத்துல மூன்றாவது கை யா என்னேரமும் ஒட்டிகிட்டே இருக்கு. 

ஆண்டுக்கு ஒரு செல்போன். 
மாதத்துக்கு ஒரு நெம்பர்
ஒரு நாளைக்கு ஒரு பிளான்
ஒரு நிமிடத்துக்கு ஒரு மெசேஜ்
ஒரு நொடிக்கு ஒரு பைசா னு
போன் கூடவே காலத்த ஓட்டுறோம். 

இப்படிப்பட்ட அருமை பெருமை வாய்ந்த கைபேசியை தேர்ந்தெடுக்க வழி சொல்றேன் வாங்க!




முதலில் 

மொபைல் போன் பேசும் நேரம். 


ஒரு மொபைல் போன் வாங்கும்போது அது பேசுவதற்கு பேட்டரி நிற்கும் நேரம் பார்த்து வாங்க வேண்டும். பெரும்பாலும் நாம் மொபைல் ஸ்டாண்ட் பை மோட்'ல் எவ்வளவு நேரம் நிற்கும் என பார்த்து வாங்குகின்றோம்.

அதனால் அது நாம் தொடர்ச்சியாக பேசும் போது எகிறிவிடுகிறது. பொதுவாக பேசும் போது 5 மணிநேரங்களுக்கு மேல் தாங்கும் மொபைல்களை வாங்குவதே சிறந்தது. 

அடுத்து 


பேட்டரி தாங்குதிறன்

பொதுவாக பேசும் போதும், இணையத்தில் உலாவும் போதும் தான் பேட்டரி சீக்கிரம் திர்ந்து விடுகிறது. இதனை பார்த்து வாங்குவது சிறந்தது. மொபைல் போன் பேட்டரிகள் எம்.எச்.இசட் கொண்டு அளவிடப்படுகிறது. 1000 எம்.எச்.இசட் அளவுக்கு மேலே உள்ள பேட்டரி வாங்குவது சால சிறந்தது. 

முக்கியமான மேட்டர் 

கோஸ்ட் ​பைல்க​ளை கணிணியில் இருந்து அழிக்கலாம்!







ஒவ்​வொரு மு​றையும் கணிணியில் புதியதாக Device க​ளை இ​ணைக்கும் ​போதும் கணிணி Registry ல் பதிவு ​செய்து ​கொள்கிறது. நாம் அந்த டி​வைஸ்க​ளை பயன்படுத்துவ​​தை நிறுத்தியபின்னரும் அந்த ​  Registry  கள் கணிணியி​லே​​யே ​தொடர்நது காணப்படும். 

இந்த ​பைல்கள் ​GHOST FILES என்று அ​ழைக்கப்படுகின்றது.  இவற்றால் கணிணியின் ​வேகத்தில் த​டை ஏற்படுகிறது. இந்த ​பைல்க​ளை நீக்க ​​GHOST BUSTER மென்​பொருள் பயன் படுகினறது.  



​ஒவ்​வொரு மு​றையும் கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொரு​ளை ​தொடங்கியவுடன் அதுவாக​வே ஸ்​கேன் ​செய்து கணிணியில் உள்ள அ​னைத்து ​டி​ரைவர் பட்டிய​லையும் முன்​னே நிறுத்துகிறது.  ​கோஸ்ட்டி​ரைவர்கள் தனியாக ​வேறு வண்ணத்தில் முன்னிருத்தப்படுகிறது.



சில முக்கியமான டி​ரைவர்கள் கணிணியின் இயங்குதல் மற்றும் கிராபிக்ஸ் மற்றும் ஒலி அ​மைப்புகளுக்ககாக உள்ளது. அவற்​றை  ​நீக்கினால் கணிணி இயங்குதலில் பிரச்ச​னைகள் ஏற்படும். இந்த வ​​கையான சிஸ்டம் டி​ரைவர்கள் தனியாக காட்டப்படுகின்றன.



​டி​ரைவரைக​​ளை வ​கைப்படுத்திய பின்னர் ​கோஸ்ட் ​பைல்க​ளை ரிமூவ் ​செய்ய ​வேண்டும். ஒரு ​பை​​லை நீக்கல் வ​கையில் ​சேர்க்க ஆட் டி​வைஸ் ​மெனு​வையும்,  ஒன்றுக்கு ​மேற்பட்ட ​பைல்க​ளை  நீக்கல் ​மெனுவில் ​சேர்க்க ஆட் கிளாஸ் ஐம் பயன்படுத்தலாம்.




​தெரியாமல் ஒரு ​முக்கியமான டி​ரைவ​ரை ஆட் ​செய்துவிட்டால் ரிமுவ் டி​வைஸ் ​மெனு​வை ​கொண்டு அ​தை நீக்கலாம். ​கோஸ்டாக ஆட் ​செய்யப்பட்ட ​பைல்களின் விவரங்க​ளை காண ப்ராபர்டீஸ் ​மெனு​வை பயன்படுத்தலாம்.




ஒவ்​வொரு மு​​​றையும் ​கோஸ்ட் ​பைல்க​ளை  நீக்குவதற்கு முன்னர் Create Restore Check Point உருவாக்கிக் ​கொள்ள ​வேண்டும்.  தவறாக ​பைல்க​ளை நீக்கிவிட்டால் அவற்​றை மீண்டும் ​பெற இது உதவும். 



இறுதியாக இடது மூ​லையில் காணப்படும் ரிமூவ் ​கோஸ்ட் பட்ட​னை அழுத்துவதன் மூலம் ​தே​வையற்ற ​கோஸ்ட் ​​பைல்க​ளை கணிணியில் இருந்து நீக்கலாம். 

INFOGRAPHIC: Google Drive vs Dropbox vs SkyDrive vs iCloud


Google jumps into cloud storage service by launching of Google Drive storage service in April 2012. Google Drive gives heavy competition to other popular service like Dropbox. Here below the infographic designed by infographiclabs compares top four cloud storage services Google Drive, Dropbox, SkyDrive and iCloud.

Sunday, July 22, 2012

யூட்யூபில் முகத்தை மறைக்கலாம்





நாம் வீடியோ ஏதாவது பார்க்க வேண்டுமானால் முதலில் செல்வது கூகுளின் யூட்யூப் தளத்திற்கு தான். இது வரை பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய யூட்யூப் தற்போது வீடியோவில் முகத்தை மறைக்கும் (Face Blurring) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் வீடியோவை யூட்யூபில் அப்லோட் செய்த பிறகு அதனை எடிட் செய்யும் வசதி இருக்கும் அல்லவா? அதில் Enhancement என்பதை கிளிக் செய்தால் பின்வருமாறு வரும்.


அதில் வீடியோவிற்கு கீழே Additional Features என்பதை கிளிக் செய்தால் Blur All Faces என்று காட்டும். அதில் Apply என்பதை க்ளிக் செய்தால் வீடியோவில் உள்ள முகங்கள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட வீடியோவின் Preview-ஐயும் பார்க்கலாம்.

பிறகு மேலே Save As என்பதை கிளிக் செய்தால், முகங்கள் மறைக்கப்பட்ட வீடியோ தனியாக உருவாக்கப்படும். Save என்பதை கிளிக் செய்தால் அதே வீடியோ மாற்றப்படும்.

மேலும் வீடியோவின் தரத்தை பொறுத்து, சில நேரங்களில் வேலை செய்யாமல் இருக்கலாம் என்றும் யூட்யூப் தெரிவித்துள்ளது.

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க



சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.



1. XP -->கிளிக் programs--> Run

 windows 7 க்கு programs---> search box---> Type "Run"

2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் 

gpedit.msc




3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.


--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.



இப்போ OK or APPLY செய்யவும்.

கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.


இந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்




கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று நம்மிடம் பணம் இல்லாத நேரத்திலும் ஏதேனும் முக்கியமான பொருள் வாங்க வேண்டி இருந்தால் அக்கம் பக்கம் கடன் கேட்டு அலைய வேண்டியதில்லை.  கிரெடிட் கார்ட் இருந்தால் ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியும். மற்றும் ஏராளமான பயன்களை கிரெடிட் கார்ட்கள் வழங்குகிறது.


கிரெடிட் கார்ட் வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. கிரெடிட் கார்ட் வாங்க அனைத்து தகுதிகள் இருந்தாலும் அப்ப்ளிகேஷன் கொடுத்து அப்ரூவலுக்காக நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். (எனக்கு Barclays bank கார்ட் வர இரண்டு மாதம் ஆச்சு). ஆனால் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் அப்படி இல்லை ஆன்லைனில் கிரடிட் கார்ட் அப்ளை செய்து அதற்கான அப்ப்ரூவலையும் உடனே பெற்று கொள்ளலாம்.


இப்பொழுது இந்தியாவிலும் இந்த திட்டம் வர இருக்கிறது. பிரபல வங்கியான  Standard Chartered Bank முதன் முதலில் அறிமுக படுத்த இருக்கிறது. இனி கிரெடிட் கார்ட்களை ஆன்லைனில் அப்ளை செய்வது மட்டுமின்றி அப்ரூவலையும் சில நிமிடங்களிலேயே பெற முடியும். அதற்க்கான வழிமுறைகளை கீழே காண்போம்.


ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி: 

இந்த வசதியை உபயோகிக்க முதலில் Standard Chartered Bank இந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான கார்டை தேர்வு செய்து அதற்க்கு கீழே இருக்கும் Apply Now என்ற பட்டனை கிளிக் செய்யவும். 


அடுத்து அதற்க்காக கொடுக்கப்படும் படிவத்தை உங்களின் சரியாக விவரங்களுடன் பூர்த்தி செய்து Proceed கொடுத்தால் போதும். அடுத்த சில நிமிடங்களின் உங்களின் கிரெடிட் கார்ட் அப்ரூவல் செய்தியை ஆன்லைனில் பார்த்து கொள்ளலாம்.  உங்களின் கிரெடிட் கார்ட் அப்ரூவல் ஆகிவிட்டால் அந்த வங்கியில் நபர்கள் உங்களை அணுகி உங்களின் சான்றிதழ்களை பெற்று கொள்வார்கள்.

அந்த சான்றிதழ்களை உங்கள் வங்கிக்கு அனுப்பி உங்களின் கடைசி கட்ட அனுமதியையும் வழங்கி விடுவார்கள். இந்த லிங்கில் application statusசென்று உங்களின் விவரங்களை கொடுத்தால் உங்களின் கிரெடிட் கார்ட் செயல்கள் எந்த நிலையில் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். 

இனி எந்த கால விரையமுமின்றி கிரெடிட் கார்ட்களை ஆன்லைனில் அப்ளை செய்து பெற்று கொள்ளலாம். கிரெடிட் கார்டில் எந்த அளவு பயன் உள்ளதோ அதை விட இரு மடங்கு ஆபத்தும் உள்ளது. சரியாக பணம் கட்ட தவறினால் மீட்டர் வட்டி கணக்கில் உங்களுக்கு அபராதம் விதிப்பார்கள். கவனமாக இருக்கவும்.

இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற




ரத்த தானம் என்பது இப்போது அடிக்கடி அவசியமாகிற ஒன்று. இணையத்தில் நிறைய ரத்த தானம் குறித்த தளங்கள் இருப்பினும். நிறைய நண்பர்கள் பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் ரத்தம் தேவை என்று கேட்பார்கள். ஆனால் அதன் மூலம் மட்டும் நமக்கு உதவி கிடைப்பது இல்லை. இணையத்தில் எப்படி எளிதாக இதை செய்வது என்று பார்ப்போம். அத்தோடு வலைப்பதிவர்கள் எப்படி இது குறித்த Gadget- ஐ தங்கள் தளங்களில் வைப்பது என்றும் பார்ப்போம். 


இங்கே உள்ள தளங்கள் எல்லாவற்றிலும் ரத்த தர விரும்புவோர் Register செய்து கொள்ளலாம்.


இந்த தளம் நகர வாரியாக ரத்தம் பெறுவோர் கொடுப்போர் தகவல்களை கொண்டிருக்கும். உங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட பிரிவை தெரிவு செய்து உங்கள் நகரத்தில் இருக்கும் நண்பர்களை தேடலாம். பின்னர் அவர்களின் போன் நம்பர் மூலம் அவர்களை தொடர்பு கொள்ள இயலும். 

இதை வலைப்பூவில் Gadget ஆகவும் வைக்க முடியும். Get BloodHelpers Search / Blood Request Widget 


கிட்டத்தட்ட இருபதாயிரம் நண்பர்களுடன் இயங்கும் இந்த தளம் மிக எளிதான வழிகளை கொண்டுள்ளது. உங்களுக்கு ரத்தம் தேவை என்றால் இவர்களை தொலைபேசி மூலமோ அல்லது, SMS அனுப்பியோ தொடர்பு கொள்ள முடியும். அதற்கு உங்கள் ஏரியாவின் Pin Code மற்றும் STD Code தெறித்து இருக்க வேண்டும். அவ்வளவே. 


முதல் தளத்தை போலவே மிக எளிதாக் தளத்தின் முகப்பிலேயே நீங்கள் ரத்த தானம் தருவோரை தேட முடியும். ரத்தம் தேவை என்றால் போஸ்ட் செய்யவும் இயலும். 


தளத்தின் முகப்பிலேயே யாருக்கு, எங்கே ரத்தம் தேவை. என்ன காரணம் போன்றவற்றை சொல்லி விடுகிறார்கள். இதே போல ரத்தம் தேவைப் படுவோர் போஸ்ட் செய்யலாம். உடனடி தேவை என்றால் ரத்தம் தருபவர்களை தொடர்பு கொள்ளவும் முடியும். 

மற்ற சில தளங்கள்: 


Thursday, July 19, 2012

கணணியில் தகவல்களை மறைத்து வைப்பதற்கு




tamil ict news,it,ict,tamil news,உங்களது கணணியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்கலாம்.

இச்செயலை மேற்கொள்ள பல்வேறு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை தேர்ட் பார்ட்டி புரோகிராம் என அழைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது நூறு சதவிகிதம் பாதுகாப்பு எனச் சொல்ல முடியாது.

எனவே விண்டோஸ் இயக்கம் தரும் பாதுகாப்பு வழியை இங்கு காணலாம். இதற்கு கீழ்க்காணும் வழிகளை பின்பற்ற வேண்டும்.

1. முதலில் உங்கள் கணணியில் நீங்கள் Administratorஆக லொகின் செய்திருக்க வேண்டும்.

2. இனிமேல் மறைத்து வைக்க வேண்டிய தகவல் உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரு புதிய கோப்பறையில் போட வேண்டும். எடுத்துக்காட்டாக  D ட்ரைவில் Data என ஒரு கோப்பறையை உருவாக்கலாம்.

3. அதன் பின் Start பட்டனை அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி(command prompt) கிடைக்கும்.

4. இங்கு நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய கோப்பறையின், அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். உதாரணமாக attrib+s+h D:Data என இருக்க வேண்டும். இதன்பின் உங்கள் கோப்பறை மறைக்கப்படும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம்.

மறைத்து வைத்துள்ள கோப்பறைகள் என்றாவது ஒருநாள் அல்லது ஒருநேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம் அல்லது மேலும் சில கோப்புகளை இதன் பின் மறைத்து வைக்க எண்ணி இந்த கோப்பறையில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது attrib s h D:Data என டைப் செய்திட வேண்டும்.

Wednesday, July 18, 2012

மின்னஞ்சல் மூலம் பைல் பார்மட் மாற்ற




எம்.எஸ். ஆபீஸ் 2003 பதிப்பை இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் கள், தற்போது பரவலாகத் தொடங்கி இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2007, மற்றும் 2010 தொகுப்புகளில் உருவான பைல்கள் கிடைத்தால், திறந்து பார்க்க இயலாமல் சிரமப்படுவார்கள்.

ஏனென்றால், மாறா நிலையில், இந்த புதிய தொகுப்புகள், ஆபீஸ் 2003 தொகுப்பினால், திறந்து படிக்க இயலாத பார்மட்டில் உருவாக்குகின்றன. எடுத்துக் காட்டாக, வேர்ட் 2003 தொகுப்பில் ‘doc’ என்ற பார்மட்டில் டாகுமெண்ட் கள் சேவ் செய்யப்படுகின்றன. ஆனால் வேர்ட் 2007 மற்றும் 2010ல் இவை ‘docx’ என்ற பார்மட்டில் சேவ் செய்யப்படுகின்றன.

இதே போல் பவர்பாய்ண்ட் மற்றும் எக்ஸெல் பைல்களும் புதிய பார்மட்டில் கிடைக் கின்றன. இவற்றை எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் திறந்து படிக்க, மீண்டும் இவற்றை புதிய பதிப்பு புரோகிராம்களில் திறந்து, பின்னர் Save அண் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில், வேர்ட் 2003 பிரிவினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்த வரை இன்னும் ஆபீஸ் 2003 தொகுப்பு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்தப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றவர் களுக்கு உதவ இணையத்தில் பல தளங்கள், இலவசமாக இந்த பார்மட் மாற்றத்திற்கு உதவுகின்றன.

இவற்றில் மிகச் சிறப்பான முறையில், வேகமாக மாற்றித் தரும் தளமான www.zamzar.comகுறித்து முன்பே கம்ப்யூட்டர் மலரில் குறிப்பிட்டிருந்தோம். இந்த தளத்தில் நுழைந்து, மாற்ற வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், பைல் பார்மட் மாற்றப்பட்டவுடன், நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு, பார்மட் மாற்றப் பட்ட பைலை டவுண்லோட் செய்திட லிங்க் கிடைக்கும். இந்த லிங்க்கில் கிளிக் செய்து, பார்மட் மாறிய பைலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

இப்போது இந்த தளம் இன்னும் ஒரு வசதியைத் தருகிறது. மின் அஞ்சல் வழியாக, நாம் பார்மட் மாற்ற வேண்டிய பைல்களை அனுப்பினால், அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாற்றப்பட்டு, மீண்டும் மின் அஞ்சல் முகவரிக்கு, லிங்க் அனுப்பப்படுகிறது. இந்த தளம் சென்று, பைல்களை அப்லோட் செய்திடத் தேவை இல்லை.

எந்த வகை பார்மட்டினை மாற்ற வேண்டுமோ அதனை ஒட்டி இதற்கான மின்ன்னஞ்சல் முகவரி தரப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மாற்றபட வேண்டியது டாகுமெண்ட் பைல் எனில், doc@zamzar.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பி.டி.எப். பைலை டாகுமெண்ட் பைலாக மாற்ற வேண்டும் என்றாலும், இதே முகவரிக்கு அனுப்பலாம். ஒரே மின்னஞ்சலில், பல பைல்களை அனுப்பலாம். ஒரு பைலை பல்வேறு பார்மட்டுகளில் மாற்ற

MS Office 2013என்ன புதுசு? இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி? [Consumer Preview]




MS Office தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் மென்பொருள். நம்முடைய பெரும்பாலான அலுவல் சம்பந்தப்பட்ட வேலைகள் அதில் தான் இருக்கும். Microsoft ஒவ்வொரு முறையும் புதிய Version வெளியிடும் போதும் நிறைய புதிய வசதிகளை சேர்த்து வெளியிடும், இந்த முறை வந்துள்ள Office 2013 - இல் என்ன புதுசு என்றும் , அதன் Consumer Preview வை எப்படி டவுன்லோட்  செய்வது என்ற வழிகளையும் காண்போம். 

என்ன புதுசு? 
  1. முழுக்க முழுக்க மேம்படுத்தப் பட்ட வசதி
  2. Metro என்ற

Wednesday, July 11, 2012

நோபல் பரிசு உருவான கதை உங்களுக்கு தெரியுமா!







ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு
எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.
 
இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

கூகுள் குரோமில் Video Chatting மற்றும் சில பயனுள்ள வசதிகள்!


குரோமின் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். இந்த புதிய பதிப்பில் Video Chatting, Improved Cloud Printer போன்ற முக்கியமான வசதிகளை புகுத்தி உள்ளது.

ஒன்று இது நாள் வரை மென்பொருட்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்த வீடியோ சேட்டிங் வசதி இனி எந்த மென்பொருளின் துணையுமின்றி கூகுள் குரோமிலே பெற்று கொள்ளலாம். getUserMedia Api என்ற மென்பொருள் மூலம் இந்த வசதியை புகுத்தி உள்ளது.இந்த வசதிகளை   Magic Xylophone மற்றும் webcam toy போன்ற தளங்கள் மூலம் சோதிக்கலாம்.  இந்த புதிய பதிப்பில் Video Rotate, motion detection, face detection போன்ற வசதிகள் உள்ளது. 


ஒவ்வொரு நாளும் லட்ச கணக்கானவர்கள் உபயோகிக்கும் இந்த வீடியோ சேட்டிங் வசதி குரோம் உலவியிலேயே வந்தது பெரும்பாலானவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். 

இந்த பீட்டா வெர்சனில் பிரிண்டிங் விண்டோவில் உங்களின் கிளவுட் பிரின்டர்களை டீபால்டாக இணைத்துள்ளது. ஆகவே நீங்கள் சுலபமாக கிளவுட் பிரிண்டர்களில் பிரின்ட் செய்ய முடியும். 



இந்த புதிய வசதிகளை பெற Chrome Beta 21.0 வெர்சனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Tuesday, July 10, 2012

கூகுலில் நீங்கள் விரும்பியதை தேட!!!



கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெறுவதற்கான ஒரு சேவையையும் கூகுல் வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
அட கூகுல் இத்தனை சேவைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறதா என்று வியப்பில் ஆழ்த்தக்கூடிய இந்த சேவையை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நான்கெழுத்து இணையதளம் மூலம் வழங்குகிறது.டபில்யுடியுஎல் டாட் காம் என்பது தான் அந்த தளத்தின் முகவரி.
வாட் டூ யூ லவ் என்பதன் சுருக்கமாக இந்த முகவரி அமைந்துள்ளது.அதாவது கூகுலில் நீங்கள் விரும்புவது என்ன என்று கேட்கும் வகையில் அமைந்துள்ளது.
கூகுலில் தேடுவது போல இதிலும் உங்கள் தேடலுக்கான குறிச்சொல்லை டைப் செய்ய வேண்டும் .அதன் பிறகு தான் ஆச்சர்யம் காத்திருக்கிறது.கராணம் கூகுலில் வருவது போல தேடல் முடிவுகளில் பட்டியல் வருவதற்கு பதில் பல வகையான தேடல் வகைகள் தோன்றுகின்றன.
கூகுல் வரைபடத்தில் இருந்து வீடியோ,செய்தி,வலைப்பதிவு,புத்தகம்,மொழிபெயர்ப்பு,புகைப்படம் என கூகுல் வழங்கும் அனைத்து வகையான தேடல் சேவைகளின் முடிவுகளும் பெட்டியாக பெட்டியாக அடுக்கப்படுகின்றன.ஒரு நிமிடம் எந்த சேவையை பார்ப்பது,எதை பயன்டுத்துவது என புரியாமல் உங்களுக்கே குழப்பமாக கூட இருக்கலம்.
ஆனால் கொஞ்சம் பொருமையாக கவனித்தால் இத்தனை விதமான சேவைகளா என்ற வியப்பு ஏற்படலாம்.
உதாரனத்திற்கு சச்சின் டெண்டுகர் பற்றி தேடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம் முதலில் குகுல் வரை படத்தில் சச்சின் சார்ந்த தேடல் முடிவு வருகிறது.அதன் பக்கத்திலேயே யூடியூப்பில் சச்சின் தொடர்பான வீடியோக்களும்,அருகிலேயே முப்பரிமானத்தில் சச்சினை விரிவு படுத்தி கொள்வதற்கான வாய்ப்பும் வருகிறது.
அதற்கு கீழே சச்சின் தொடர்பான‌ வலைப்பதிவுகள்,சச்சினை 57 மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி,மற்றும் சச்சனோடு திட்டமிடும் வாய்ப்பும் வந்து நிற்கிறது.எல்லாமே கூகுல் வழங்கும் சேவைகள் தான்.(கூகுல் நாட்காட்டி,கூகுல் மொழிபெயர்ப்பு,பிலாகர்)
இதோடு முடியவில்லை,கூகுல் புத்தக தேடல் மூலமாக சச்சின் தொடர்பான புத்தகங்களை தேடிப்பார்க்கலாம்.ஜி டாக் மூலமாக சச்சினோடு பேசலாம்.கூகுல் இமேஜ் வாயிலாக சச்சின் புகைப்படங்களை தேடலாம் கூகுல் எர்த்தில் சச்சின் தொடர்பான தேடலாம்.
இத்தோடு முடிந்து விடவில்லை.ஜிமெயில் மூலம் யாருக்காவது சச்சின் பற்றி மெயில் அனுப்பலாம் ,கூகுல் அனல்டிக்ஸ் வாயிலாக சச்சினின் இணைய செல்வாக்கை அலசலாம்,செல்லி சச்சினை தேடலாம் மற்றும் இன்னும் சில சேவைகள் இருக்கின்றன.எல்லாமே கூகுல் வழங்கும் சேவைகள் தான்.ஆனால் ஒரே பக்கத்தில் ஒரே நேரத்தில் அணுகலாம் என்ப‌து தான் சிற‌ப்பு.
கூகுல் எண்ணற்ற சேவையை வழங்கி வந்தாலும் அனைத்தையும் பறைசாற்றி கொள்ளமால் அதன் முகப்பு பக்கத்தை எளிமையாகவே வைத்திருக்கிறது.தேடல் தான் பிரதானமாக உள்ளது.ஆனால் இணையவாசிகள் விரும்பினால் தேடும் போது புகைப்படம் அல்லது வீடியோ அல்லது செய்தி மட்டும் தேவை என தங்கள் தேடலை சுருக்கி கொள்ளலாம்.இதற்கான தேர்வுகள் வலது பக்கத்தின் மேலே சின்னதாக இடம் பெற்றிருப்பத பலரும் கவனித்திருக்கலாம்,பயன்படுத்தியிருக்கலாம்.வரைப்டம்,புகைப்படம் ஆகியவையும் இதில் உண்டு.
இவற்றை தவிரவும் கூகுல் வழங்கும் தனித்தனி சேவைகள் உள்ளன.அவற்றை எல்லாம் தான் ஒரே பக்கத்தில் அணுக வாய்ப்பு தருகிறது கூகுலின் இந்த பக்கம் .
கூகுலின் தேடல் சாம்ப்ராஜ்யத்தை முழுவதும் கண்டு வியக்க இந்த தலத்தில் நீங்கள் கூகுலில் விரும்புவதை தேடிப்பாருங்கள்,சொக்கிப்போவீர்கள்!
இணையதள முகவரி

மௌஸை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்ததாக மாற்றுவது எப்படி?



கணினியில் நாம் பயன்படுத்தும் அனைத்து Mouse-களும் வலது கை பழக்கம் உடையவர்களுக்கே. இடது கை பழக்கம் உடையவர்கள் இதனை எளிதில் கையாள முடியாது. கண்ட்ரோல் பேனலில் சிறிய மாற்றம் செய்வதன் மூலம், இதனை இடது கை பழக்கம் உடையவர்களும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றலாம்.

முதலில் ஸ்டார்ட் மெனு மூலம் கண்ட்ரோல் பேனல்க்கு செல்லவும். அதில் "Mouse" என்பதை தெரிவு செய்யவும். 

இதில் “Switch primary and secondary buttons”  என்பதை கிளிக் செய்யவும்.


ஆனால் இதில், Cursor ஆனது

விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்



விண்டோஸ் 8 நுகர்வோருக்கான தொகுப்பினைப் பலரும் பயன்படுத்தி வருவது தெரிகிறது. எனவே, விண்டோஸ் 8 தொகுப்பிற்கான அடுத்த ஷார்ட் கட் கீ தொகுப்பு இதோ:

Alt: மறைக்கப்பட்ட மெனு பார் காட்டப்படும்.

Alt + D: அட்ரஸ் பார் தேர்ந்தெடுக்கப்படும்.

Alt + P: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் Preview Pane காட்டப்படும்.

Alt + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் முன்னோக்கிச் செல்லும்.

Alt + Shift + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் பின்னோக்கிச் செல்லும்.

Alt + F4: அப்போதைய விண்டோ மூடப்படும். டெஸ்க்டாப்பில் ஷட் டவுண் விண்டோ மூடப்படும்.

Alt + Spacebar: அப்போதைய விண்டோவி லிருந்து ஷார்ட் கட் மெனுவினைப் பெறும்.

Alt + Esc: திறந்திருக்கும் புரோகிராம்களைச் சுற்றி வரும். அவை திறக்கப்பட்ட வரிசையில் இது மேற்கொள்ளப்படும்.

Alt + Enter: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்திற் கான ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

Alt + PrtScn: அப்போதைய விண்டோ காட்சி யின் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லப்படும்.

Alt + Up: விண்டோஸ் எக்ஸ்புளோரர் போல்ட ரில் ஒரு போல்டர் முன் செல்லப்படும். (எக்ஸ்பி (XP) சிஸ்டத்தில் Up Arrow போலச் செயல்படும்)

Alt + Left Arrow: முந்தைய போல்டரைக் காட்டும்.

Alt + Right Arrow: அடுத்த போல்டரைக் காட்டும்.

Shift + Insert CD/DVD: ஆட்டோ பிளே அல்லது ஆட்டோ ரன் கிளிக் செய்யப்படாமலேயே சிடி/டிவிடி இயக்கப்படும்.

Shift + Delete: தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலுமாக நீக்கப்படும். ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு செல்லப்படாது.

Shift + F6: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும்.

Shift + F10: தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக் கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.

Shift + Tab: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும். (Shift + F6 போல)

Shift + Click: தொடர்ச்சியாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கும்.

Shift + Click: டாஸ்க் பார் பட்டனில் கிளிக் செய்கையில், புரோகிராமின் புதிய இயக்கக் காட்சியைக் கொடுக்கும்.

Shift + Rightclick: தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.

Ctrl பட்டனுடன் பெரும்பாலும் தற்போது பழக்கத்தில் உள்ள செயல்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றம் எதுவும் இல்லை.

ஒரு கிளிக் இணைய சேவை!!



இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிறது பேஜ் ஜிப்பர் இணையதளம்.
இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம்.
இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள்.
அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய பக்கங்களை ஒரே கிளிக்கில்,அதாவது ஒரே பக்கத்தில் சுலபமாக படிக்க வழி செய்கிறது பேஜ் ஜிப்பர்.
பெரும்பாலான இணையதளங்களில் ஒரே கட்டுரை பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொடர் பக்கங்களாக கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.பார்த்து வெறுத்திருக்கலாம்.
முதல் பகுதியை படித்து முடித்த உடன் அதன் கீழே உள்ள அடுத்து பகுதியை கிளிக் செய்தால் தான் அடுத்த பகுதியை படிக்க முடியும்.நீளமான கட்டுரை என்றால் அடுத்து அடுத்து என கிளிக் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நீளமான,ஆழமான செறிவான கட்டுரை என்றால் அதனை ஒரே பக்கத்தில் தராமல் சில பகுதிகளாக பிரித்து அளிக்கப்பட்டிருப்பது புரிந்து கொள்ளகூடியது தான்.இத்தகைய கட்டுரைகளில் கூட அதனை ஒரே பக்கத்தில் படிப்பதற்கான வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால் பல கட்டுரைகள் தேவையில்லாமல் பல பகுதிகளாக பிரித்து தரப்பட்டிருக்கும்.இவை கிளிக் விகிதத்தை அதிகரிப்பதற்கான மலிவான உத்தியே தவிர வேறில்லை.கட்டுரைகள் மட்டும் அல்லாமல் டாப் டென் அல்லது டாப் 50 போன்ற பரிந்துரை கட்டுரைகளும் இதே போல பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு பகுதியாக கிளிக் செய்து ஒவ்வொரு பரிந்துரையாக படிக்க வேண்டும்.ஒவ்வொருவரும் பல இணையதளங்களை பறவை பார்வையாக பார்த்து வரும் போது இப்படி ஒரே கட்டுரையில் நேரத்தை செலவிடுவது வெறுப்பை ஏற்படுத்தும்.
இது போன்ற நேரங்களில் இணையவாசிகள் கொஞ்சம் ஆவேசமாகி இந்த கட்டுரையே வேண்டாம் என வெளியேறிவிடுவதும் உண்டு.
பேஜ் ஜிப்பரை பயன்படுத்த துவங்கிவிட்டால் இப்படி கோபத்தில் வெளியேற வேண்டாம்.காரணம் இந்த சேவை பல பக்கங்களாக பிரிந்து கிடக்கும் கட்டுரைகளை ஒரே பக்கத்தில் படிக்க உதவுகிறது.உங்கள் பிரவுசருக்கான டூல்பாராக கிடைக்கும் இதனை டவுண்லோடு செய்து கொண்டுவிட்டால் போதும்,அதன் பிறகு எப்போதெல்லாம் தொல்லை தரும் பல பகுதி கட்டுரைகளை பார்க்கிறீர்களோ,அப்பொதெல்லாம் இந்த டூல் பாரை கிளிக் செய்தால் போதும் அது தானாக அடுத்து பகுதியில் அந்த பக்கம் விரிந்து கொண்டே போக வழி செய்து தொட்ர்சியாக படிக்க வைக்கும்.
மாமுலான இணைய பக்கங்கள் மட்டும் அல்லாது புகைப்பட கேலரி தளங்களையும் இந்த சேவை மூலம் பார்வையிடலாம்.அடுத்த புகைப்படத்தை கிளிக் செய்யாமலேயே வரிசையாக புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.
அதே போல இணைய விவாத குழுக்களிலும் இந்த சேவையை பயன்படுத்தி அனைத்து கருத்துக்களையும் ஒரே பக்கத்தில் பார்வையிடலாம்.
விலம்பரங்கள் இல்லாமல் விரும்பிய வண்ணம் இணைய பக்கங்களை அச்சிட்டு கொள்ள உதவும் பிரின்ட் வாட் யூ லைக் தளத்தின் உப சேவை இந்த பயனுள்ள இணையதளம்.பயன்படுத்தி பாருங்கள்.
பிரின்ட் வாட் யூ லைக் சேவை எந்த இணைய பக்கத்திலும் அதில் உள்ள விளம்பரங்கள் மற்றும் தேவையில்லாத விவரங்களை தவிர்த்துவிட்டு தேவையான் பகுதிய மட்டும் அச்சிட்டு கொள்ள வழி செய்கிறது.இணைய பக்கங்களை அச்சிட்டு பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது.
இணையதள முகவரி;http://www.printwhatyoulike.com/pagezipper

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget